ரொறோண்டோ காலநிலை எச்சரிக்கை | இன்றும் நாளையும் 25 செ.மீ. வரை பனிப்பொழிவு!
ரொறோண்டோ, பீல், யோர்க் பிராந்தியங்களில் இன்றும் நாளையும் மொத்தம் 25 செ.மீ. வரை பனிப் பொழிவு இடம்பெறலாமெனக் கனடா காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
இன்று (திங்கள் 15) அதிகாலை ஆரம்பிக்கும் இப்பனிப் பொழிவு இரண்டு கட்டங்களாக இடம்பெறுமெனவும், முதற் கட்டமாக 5 செ.மீ. வரையிலான பனியை மதியம்வரை கொட்டி ஓயுமெனவும் பின்னர் இரண்டாவது கட்டமாக திங்கள் மாலை ஆரம்பித்து செவ்வாய் காலை வரையில் மேலும் 10-20 செ.மீ. பனியைக் கொட்டுமென காலநிலைத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இம் மாறும் காலநிலைகளுக்கேற்ப வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அத் திணைக்களம் கேட்டுள்ளது.
அதே வேளை, ஹமில்ட்டன், நயாகரா பிராந்தியங்களில் பனிப் புயல் வீசுவதற்கான சாத்தியமுண்டெனவும் இங்கு மொத்தப் பனிப்பொழிவு 30 செ.மீ. களை எட்டலாமெனவும் அது எச்சரித்துள்ளது.
