ரொறோண்டோ பெரும்பாகத்தில் 2018 ம் ஆண்டு வீடு விற்பனையில் வீழ்ச்சி

2018 ம் ஆண்டு ரொறோண்டோவில் வீடு விற்பனை 16 வீதத்தால் வீழ்ச்சி!

ரொறோண்டோ பெரும்பாகத்தில் 2017 ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2018ம் ஆண்டு வீடு விற்பனை 16.1 % சரிவு கண்டுள்ளது.

 வருடா வருட ஒப்பீட்டில் ஒரு வீட்டின் சராசரி விலை $787,330 எனவும் இது 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 4.3% சரிவு கண்டுள்ளது எனவும் அறியப்படுகிறது.

அதே வேளை தொடர் மாடிக் குடியிருப்பின் (Condominium) சராசரி விலை 7.8% தால் அதிகரித்திருக்கிறது. ரொறோண்டோ நகரத்தை அண்டிய பகுதிகளிலேயே இவ் விலை உயற்சி பொதுவாகக் காணப்படுகிறது. 

கனடாவின் முக்கிய நகரங்களை ஒப்பிடும் போது கிங்ஸ்டன் நகரத்திற்கே அதிக மக்கள் குடியேறியிருக்கிறார்களென U-Haul வாடகை வாகன நிறுவனம் தனது தரவுகளைக் கொண்டு உறுதி செய்திருக்கிறது. 2018இல் நடைபெற்ற வாகன வாடகை ஒப்பந்தங்க்அளைக் கொண்டு அந்நிறுவனம் எடுத்த கணக்கீட்டின்படி முதலாவதாக Kingston நகரமும், இரண்டாவதாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் Victoria நகரமும், Trenton, Halifax, Ottawa, Belville ஆகிய நகரங்கள் முறையே மூன்று தொடக்கம் ஆறாவது இடங்களை மக்கள் விரும்பிக் குடி பெயரும் நகரங்களெனத் தெரிய வந்துள்ளது.