Entertainment

‘Big Boss’ தர்ஷன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆண்ட்றாயிட் குஞ்சப்பன் V 5.25’ தமிழ் Remake.


உலகநாயகன் கமலஹாசன் நெறிப்படுத்திவரும் ‘பிக் பொஸ்’ நிகழ்ச்சியின் 3 ஆவது சீசனில் தோன்றிப் பிரபலமான ஈழத்தைச் சேர்ந்த தர்ஷன் தங்கராஜா கதாநாயகனாக நடிக்கும் தமிழ்ப் படமொன்று தயாராகி வருகிறது.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் தயாரிக்கப்படவிருக்கும் இப் படம் ஏற்கெனவே மலையாளத்தில் வெளிவந்த ‘ஆண்ட்றோயிட் குஞ்சப்பன் V 5.25’ படத்தின் தமிழ்ப் பிரதி.


‘பிக் பொஸ்’ நிகழ்ச்சியில் தர்ஷனது பங்கு முடிந்ததும் திரைப்படங்களில் நடிப்பதில் அவர் கவனம் செலுத்திவந்தார். இவ் விடயத்தில் கமல ஹாசனின் ஆதரவும் ஊக்கமும் அவருக்கு இருந்தது.

‘ஆன்றாயிட் குஞ்சப்பன் V 5.25’ மலையாளத்தில் வெளிவந்த மிகவும் வெற்றிகரமான திரைப்படம். இதை இயக்கும் ரவிக்குமார் படத்தில் தர்ஷனின் தந்தையாகவும் நடிக்கவுள்ளாராம். நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கும் இப் படத்தில் முக்கிய பாத்திரமொன்று உள்ளதாம்.

இந்த மாதம் (பெப்ரவரி) படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.