Sri Lanka

பாட்டாளி சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்டுள்ளார்!

கொழும்பு, டிசம்பர் 19, 2019

முன்னாள் அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவருமான பாட்டாளி சம்பிக்க ரணவக்க கொழும்பு குற்றப்பிரிவினால் சில மணி நேரங்களின் முன் கைதுசெய்யப்பட்டுள்ளாரெனத் தெரிகிறது.


2016இல் நடைபெற்ற வீதி விபத்தொன்றில் மோட்டர் சைக்கிளில் வேகமாக வந்த ஒருவர் அமச்சர் ரணவக்கவிந் வாகனத்தின் மீது போதியதன் காரணமாகக் காயமடைந்திருந்தார். இதன் காரணமாக அமைச்சர் மீதும், அவரது சாரதி மீதும் வழக்குப் பதியப்பட்டுப் பின்னர் விடுதலையாகியிருந்தார்.

தற்போது, புதிய அரசாங்கம் அவ் வழக்கை மீள விசாரிக்கிறது. வழக்குத் தொடுநர் நாயகம் மூத்த காவற்துறை அதிகாரிக்கு சம்பிக்கவைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தும்படி பணித்ததன் பேரில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அதிகாலை, அவ் விபத்தில் சம்பந்தப்பட்ட சம்பிக்கவின் சாரதியின் மனைவி, மாமியார், கைக்குழந்த ஆகியோரைக் குற்றப் பிரிவினர் விசாரணைகெனப் பலவந்தமாகக் கொழும்பு கொண்டுவந்திருந்தார்கள்.

அவர் நாட்டைவிட்டு தப்பித்து ஓடிவிடக் கூடாது என்பதற்காக சில நாட்களுக்கு முன் அவர் மீது அரசு பயணத்தடையையும் விதித்திருந்தது.