Sri Lanka

கிளிநொச்சி | மண் அகழ்வு பிரச்சினையில் ஒருவர் கொலை


கிளிநொச்சி, பரந்தன் பகுதியிலுள்ள உமையாள்புரம் என்ற இடத்தில் மண் அகழ்வதில் இரு தரப்புகளுக்கிடையே ஏற்பட்ட மோதலின்போது வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று (14) காலை 11:30 மணியளவில் நடைபெற்ற இச் சம்பவத்தின்போது மூவர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்கள் எனவும் அறியப்படுகிறது.


இச் சம்பவம் தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்கிறது எனவும் கிளிநொச்சிப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.