நவம்பர் 10 ற்கு முன்னர் மாகாணசபைத் தேர்தல் நடைபெறாவிட்டால் நான் பதவி விலகுவேன் – மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு!
மாகாணசபைத் தேர்தல்களை நவம்பர் 10ம் திகதிக்கு முன்னர் நடத்தாவிட்டால் தான் பதவி விலகப்போவதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
“நான் இது பற்றி என் குடும்பத்தினருடனோ அல்லது மற்றய இரு ஆணய அங்கத்தவர்களுடனோ பேசவில்லை. நானும் ஒரு பிரஜை. தேவையில்லாமல் தேர்தல்கள் பின்போடப்படுவதையிட்டு எனது இதயம் வலிக்கிறது. சட்டமியற்றுபவர்கள் தொடர்ந்தும் தேர்தல்களைப் பின்போட்டுக்கொண்டு வரும்போது மனசாட்சியுடன் நான் எனது கடமைகளைச் செய்யமுடியாதுள்ளது.
இது பற்றி நான் சில அரசியல் கட்சிகளுடன் பேசும்போது அவர்கள் தமது நிகழ்ச்சி நிரலின்படிதான் தேர்தல்களை நடத்துவோம் என்று கூறினார்கள். அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு தேர்தல்களை நடாத்த நான் விரும்பவில்லை. அவர்கள் விரும்பினால் இன்னுமொரு தலைவரின் கீழ் தேர்தல்களை நடாத்தட்டும்”. என்று மிகவும் வெறுப்புற்ற நிலையில் மஹிந்த தேசப்பிரிய பத்திரிகையாளர் மத்தியில் பேசினார்.
நன்றி: கொழும்பு டெலிகிறாப்
