ஃபைசர் தடுப்பு மருந்து முதல் 6 மாதங்களில் 91% தொற்றைத் தடுக்கிறது – ஆய்வு
ஃபைசர் தடுப்பு மருந்து எடுக்கப்பட்டு முதல் 6 மாதங்களில் ஒருவருக்கு ஏற்படக்கூடிய கொறோணாவைரஸ் தொற்றின் 91% மான சாத்தியத்தைத் தடுக்கிறது என அம் மருந்தின தயாரிப்பாளர் தெரிவிக்கின்றனர்.
இம் மருந்தின் செயற்திறன் பற்றி மேற்கொள்ளப்பட்ட இன்னுமொரு ஆய்வொன்றில், இரண்டு தடவைகள் மரிந்தை எடுத்தவர்களில், 80, 90 வயதுள்ளவர்களும் கூட மிகவும் வலிமையான எதிர்ப்பொருள்களை (antibodies) உருவாக்கும் திறனுள்ளவர்களாகக் காணப்படுகின்றனர் எனத் தெரியவந்துள்ளது.
மனைத் உடலில் இந்த எதிர்ப்பொருட்களை நீண்டகாலத்துக்கு வைத்திருக்க உதவும் T-cells, 63% மானோரில் மட்டுமே உருவாகியிருந்தமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், இந்த தடுப்பு மருந்தினால் ஒருவருக்கு எத்தனை காலத்துக்குப் பாதுகாப்புக் கிடைக்குமென்பதை ஒருவராலும் உறுதியாகச் சொல்லமுடியாதுள்ளது எனவும் கூறப்படுகிறது.
இரண்டாவ்து டோஸ் கொடுத்து 6 மாதங்களுக்குப் பின்னர் 46,000 மக்களில் ஃபைசர் தனது மனிதப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தது. அதே வேளை தென்னாபிரிக்காவில் பரவியதாகக் கூறப்படும் திரிபடைந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட 800 பேர் மீதும் ஃபைசர் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தது.
தென்னாபிரிக்க வைரசினால் பாதிக்கப்பட்டவர்களில், இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்டு 6 மாதங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் மருந்தின் செயற்திறன் அதிகமாக இருந்தமை வைரஸ் எப்படியாகத் திரிபடைந்தாலும் அதிலிருந்து இம் மருந்த்தினால் பாதுகாக்க முடியுமென்ற நம்பிக்கையைத் தமக்குத் தந்திருப்பதாக ஃபைசர் நிறுவனத்தின் அதிபர் அல்பேர்ட் பூர்லா தெரிவித்திருக்கிறார்.
அஸ்ட்றாசெனிக்கா உட்பட்ட இதர தடுப்பு மருந்துகளின் நீண்டநாள் செயற்திறன் பற்றிய ஆய்வுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன எனினும் ஃபைசர் தனது முடிவுகளை விரைவாக அறிவித்துவிட்டது.
பிரேசில் வைரஸ்
இதே வேளை, பெர்மிங்க்ஹாம் பல்கலைக்கழகம், 80 முதல் 96 வயதுடைய 100 பேரைத் தெரிவுசெய்து அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆராய்ந்தது. இதன் போது, ஆரம்பத்தில் வந்திருக்கக்கூடிய கொரோணாவைரஸ்களை ஏறக்குறைய முற்றாக அழித்துவிடுமளவுக்கு எதிர்ப்பொருட்கள் அவர்களது இரத்தத்தில் காணப்பட்டதெனக் கண்டறிந்துள்ளார்கள். ஆனால் இத் தடுப்பு மருந்து பிரேசிலில் உருவாகியிருந்த வைரஸ் திரிபிற்கு எதிராக 14% குறைவாகவே செயற்பட்டதெனவும் கண்டறிந்துள்ளார்கள்.
ஆனாலும் ஃபைசர் தடுப்பு மருந்தினால் உருவாக்கப்படும் எதிர்ப்பொருட்களின் தொகை அதிகமாகையால் பிரேசில் திரிபிற்கு எதிராகவும் அது போதுமான பாதுகாப்பை வழங்குமென எதிர்ப்பர்க்கப்படுகிறது.
