பெருமை தரும் தமிழர் – மருத்துவர் தவம் தம்பிப்பிள்ளை

Video Courtesy: 2017 KELOLAND TV

மருத்துவர் தவம் தம்பிப்பிள்ளை அமெரிக்காவில் கடமையாற்றும் ஒரு ஈழத்தமிழர். உறுப்பு மாற்று சிகிச்சையில் இவர் நிபுணத்துவம் பெற்றவர்.

மரியா ஜிமெனேஸ் இவரது நோயாளி. இருபத்தொன்பது வருடங்களாக சிறுநீரக வியாதியினால் வருந்திக் கொண்டிருந்தார். சிறுநீரக மாற்று சிகிச்சை ஒன்றே அவரைக் குணப்படுத்தும் என்ற நிலை. அதற்கான இழையப் பொருத்தமான ஒருவரது சிறுநீரகத்துக்காக ஒரு வழங்குனரை அவர் தேடிக்கொண்டிருந்தார்.

அதே வேளை ரமி டேவிஸ் எனப்படும் இன்னுமொரு தாராள மனம் கொண்ட இன்னுமொரு பெண் தன்னுடைய சிறுநீரகங்களில் ஒன்றைத் தானம் செய்வதற்காக தன் இழையப் பொருத்தமுடைய ஒரு நோயாளியையும் தேடிக் கொண்டிருந்தார்.

இந்த இருவரது விருப்பங்களையும் இனிதே நிறைவேற்றி வைத்தவர்தான் நமது மருத்துவர் தவம் தம்பிப்பிள்ளை.

மருத்துவர் தவம் பற்றிய இன்னுமொரு அறிமுகத்தையும் செய்தேயாக வேண்டும். இவர் ஈழத்தமிழர்களால் உருவாக்கப்பட்ட உலகப் புகழ் பெற்ற அனைத்துலக மருத்துவ நல அமைப்பின்  (International Medical Health Organization – IMHO) நிர்வாகிகளில் ஒருவர். சிறீலங்கா உட்பட இயற்கை அனர்த்தங்கள், போரழிவுகள் நடைபெறும் உலக நாடுகளில் நிவாரணப் பணிகளை இவ்வமைப்பு செய்து வருகிறது.