Entertainment

2019 ம் ஆண்டு உலக அழகியாக ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண்

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த ரோணி-ஆன் சிங் 2019 ம் ஆண்டின் உலக அழகியாக முடிசூட்டப்பட்டுள்ளார்.

லண்டன் நகரில் இன்று நடைபெற்ற வைபவத்தில் 2018 இன் உலக அழகியான மெக்சிக்கோவைச் சேர்ந்த வனெஸ்சா பொன்ஸ் இனால் அவர் முடிசூட்டப்பட்டார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒஃபெலி மெசினோ இரண்டாவதாகவும் இந்தியாவைச் சேர்ந்த சுமன் ராவ் மூன்றாவதாகவும் உலக அழகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள்.


ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயதுடைய சுமன் ராவ், கடந்த ஜூனில், இந்த வருடத்தின் இந்திய அழகியாகத் (Miss India) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

பிரித்தானிய ஒளிபரப்பாளர் பியேர்ஸ் மோர்கன் இப் போட்டியின் தலைமை நடுவராகப் பணியாற்றியிருந்தார். 120 நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் பங்குபற்றிய இப் போட்டி, 69 வது தடவையாக இவ் வருடம் நடைபெற்றிருக்கிறது.