Sri Lanka

பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கேற்பவே தேசியக் கொள்கைகள் வகுக்கப்படும் – பந்துல குணவர்த்தன

பந்துல குணவர்த்தன

6.9 மில்லியன் வாக்காளரின் விருப்பத்திற்கிணங்கவே, எதிர்வரும் சுதந்திர தினத்தன்று தேசிய கீதத்தைச் சிங்கள மொழியில் மட்டும் பாடுவதற்கு அரசாங்கத்தால் முடிவெடுக்கப்பட்டது என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன ஊடகவியலாளருக்குத் தெரிவித்தார்.

“இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கிணங்க அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையிலேயே தேசிய கொள்கைகள் வகுக்கப்படும்” என அரசாங்கத்தின் தீர்மானத்தை ஆதரித்து அவர் பேசினார்.


கடந்த நவம்பரில் ஜனாதிபதி ராஜபக்சவை ஆதரித்து 6.9 மில்லியன் மக்கள் வாக்களித்திருந்தார்கள என அவர் மேலும் தெரிவித்தார்.