Sri Lanka

பிரித்தானியா விடுதலைப் புலிகளைத் தடைப்பட்டியலிலிருந்து நீக்குவதைத் தடுக்க இலங்கை முயற்சி


விடுதலைப் புலிகள் மீதான தடை செல்லுபடியாகாது எனச் சமீபத்தில் பிரித்தானிய தீர்ப்பாயம் வழங்கியிருந்த தீர்ப்புக்கு இணங்க பிரித்தானிய அரசு விரைவில் தனது முடிவை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத் தீர்ப்புக்கு இணங்க பிரித்தானிய அரசு வி.புலிகள் மீதான தடையை நீக்கிவிடக்கூடாது எனபதற்காக இலங்கை அரசு தனது பிரதானிகள் மூலம் பகீரதப் பிரயத்தனம் எடுத்துவருவதாக அறியப்படுகிறது.


பிரித்தானிய அரசு, 2000 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளைத் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் சேர்த்திருந்தது.

தீர்ப்பாய விசாரணைகளின்போது இலங்கை அரசு அதில் பங்கெடுக்க அனுமதிக்கப்படவில்லை என்பதால், விடுதலைப் புலிகள் பற்றிய பல தகவல்களை பிரித்தானிய அரசுக்கு (பிரதிவாதி) அது வழங்கியிருந்தது. அதில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பல அமைப்புகள் வெளிநாடுகளில் தற்போதும் இயங்கிவருகின்றன எனவும் நாட்டைச் சீர்குலைக்கும் வகையில் அவை வன்முறையைத் தூண்டிவருகின்றன எனவும் ஆதாரங்களை வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.