Sri Lanka

சுவிஸ் தூதரக ஊழியர் பிணையில் விடுதலை

டிசம்பர் 30, 2019

தான் கடத்தப்பட்டதாகப் பொய் சொன்னார் என்ற குற்றச்சாட்டின் பேரில், டிசம்பர் 16 அன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுவிஸ் தூதரக ஊழியர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.


தான் கடத்தப்பட்டதாகப் பொய்ச் சாட்சியம் சொன்னார் எனக் குற்றம் சாட்டப்பட்ட ஊழியரின் பெயரைப் பகிரங்கப்படுத்துவதோடு அவரைக் கைது செய்யும்படி காவற்துறையின் குற்ற விசாரணைப் பிரிவுக்கு உத்தரவு வழங்கப்பட்டதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்க ம்றியலில் வைக்கப்பட்டிருந்தார்.

தூதரக அதிகாரிகளின் முயற்சியில், தலா ரூ.500,000, இரண்டு அபராதப் பிணைகளில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.