Sri Lanka

ஐ.நா. மனித உரிமைகள் சபையிலுள்ள ஒவ்வொருநாடும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஆதரிக்கவேண்டும் – சம்பந்தன்

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாடும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நடைபெற்றுவரும் 46 வது கூட்டத் தொடரில் கடுமையான தீர்மானமொன்றை நிறைவேற்றுவதன் மூலம், இறுதிப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியொன்றின்போது பா.உ. ஆர். சம்பந்தன் தெரிவித்தார்.


இவ்விடயமாகத் தமிழ் அரசியல் கட்சிகள் பல ஒன்று சேர்ந்து சமர்ப்பித்த தீர்மானத்துக்கு சபையின் அங்கத்துவ நாடுகள் ஆதரவளிக்க வேண்டும். பிரித்தானியாவினால் முன்வைக்கப்பட்ட தீர்மான வரைவு காத்திரமானதல்ல எனத் தமிழ்க் கட்சிகளின் கூட்டணி தீர்மானித்திருக்கிறது என அவர் தெரிவித்தார்.

போர் முடிந்து 11 வருடங்கள் கடந்துவிட்டது இதில் தலையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு எவருமே முன்வரவில்லை. இப்போதாவது சர்வதேச சமூகம் இவ் விடயத்தில் கவனத்தைச் செலுத்த வேண்டும்,