Sri Lanka

இலங்கை | பாராளுமன்றத் தேர்தல்கள் பின்போடப்படலாம்?

கோவிட்-19 தொற்றுத் தவிர்ப்பு நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்ற நிலமையில், அடுத்த மாதம் (ஜூன் 20) நடைபெறவிருந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலைப் பின்போடுவது பற்றி ஜனாதிபதி செயலகம் உத்தேசித்து வருவதாகச் சில செய்திகள் கசிந்துள்ளதாக கொழும்பு வட்டாரங்களில் பேசப்படுகிறது.

புதிய தேர்தல் திகதி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 20 இலிருந்து மேலும் 3 – 6 வாரங்களுக்குத் தள்ளிப் போடப்படலாம் என அறியப்படுகிறது.


அதே வேளை, ஆகஸ்ட் 16 இற்கு முதல் தேர்தலை நடத்திவிடவேண்டுமென்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாகவுள்ளதாகவும், அன்றுடன் ஆணையத்துக்கான கடமைத் தவணை முடிவடைகிறது எனவும் தெரிய வருகிறது.