ColumnsEditorial

இன்று அன்னையர் தினம்….

எல்லாத் தாய்மார்களுக்கும் ஒரு குணமுண்டு. அது தம் குழந்தைகள் உணவுண்பதைப் பார்த்து ரசிப்பது.

அந்த நீண்ட ஊடுருவும் பார்வையில் ஒரு தாயின் மனத்தில் விரியும் கனவுகளை எவராலும் அறிந்திருக்க முடியாது.


அப்போது வரையப்பட்ட அந்தப் படத்தின் பிரகாரம் தன் பிள்ளையின் வாழ்வைத் செதுக்கி முடிக்கிறாள் அந்தத் தாய். அதன் பொருட்டு அவள் சிந்தும் கண்னீரும் இரத்தமும் அளவிட முடியாதவை.

அவள் வாழ்காலத்தில் அவள் கனவு மெய்ப்பட்டுவிடுமானால் அந்த நீண்ட நெடும் பார்வையைப் போலவே நீண்ட நெடும் மூச்சொன்றோடு அவள் விடைபெற்றுக்கொள்வாள்.

எல்லோருக்கும் அப் பாக்கியம் கிடைப்பதில்லை.

விண்ணிலும் மண்ணிலும் இன்னும் எமக்காக விழித்துக் காத்திருக்கும் அன்னைகளை நினைவு கூர்வோம்