NewsSri Lanka

‘அரேபியனாக்கத்தை’ எதிர்க்கிறோம் | முஸ்லிம் தலைவர்கள்

‘உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுடனும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுடனும் இணந்து அவர்களின் துன்பங்களைச் சுமந்து கொள்ளும் அதே வேளை நாம் எல்லோரும் இலங்கையர்கள் என்ற ஒரே அடையாளத்தில் ஒன்று சேரவேண்டும்’ என்று பல முஸ்லிம் தலைவர்கள் குரலெழுப்பியுள்ளனர்.

“தாக்குதல்களைத் தொடர்ந்து நாங்கள் ஒரு சமூகமாக ஆன்ம தேடலை மேற்கொண்டோம். தாக்குதல்களைச் செய்தவர்கள் எம் சமூகத்திலிருந்துதான் வந்தார்கள் என்பதைக் கற்பனை செய்யவே முடியாமலிருக்கிறது. சமூகத்தில் சில ‘அரேபியனாக்கம்’ நடைபெற்று வந்ததை நாம் அவதானித்துள்ளோம். ஆனால் அது இந்தளவுக்கு வந்து முடியும் என எதிர்பார்க்கவில்லை” என முஸ்லிம் தலைவரும் அமைச்சருமான காபிர் ஹஷிம் கூறினார். இவர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் மற்றும் பேரியல் அஷ்ராப் ஆகியோரும் ஜனாதிபதி கவுன்சில் அலி சப்ரியும் சமூகமளித்திருந்தார்கள்.


“சமய ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள் தேவையில்லை. ஒரு முஸ்லிம் பாடசாலைக்குச் செல்லும் ஒரு குழந்தை எப்படி ஒரு புத்த பிக்குவின் ஆடையைப் பற்றியோ அல்லது எஙகள் தமிழ்ச் சகோதரர்கள் வைக்கும் ‘பொட்டு’ பற்றியோ அறிய முடியும்? ஐந்து வயதில் தனிமைப்படுத்தப்பட்ட குழந்தையை 18 வயதில் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கலாம்? “- அலி சப்ரி

“இலங்கையர் என்ற அடையாளத்தை முன்னெடுப்பது இன்றைய அவசியத் தேவை. நாட்டின் மிக அவலமான நிலையில் சிறந்த தலைமைத்துவத்தைத் தந்த கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களுக்கு எப்படி நன்றிகளைக் கூறுவோமோ தெரியாது. இந்த தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட முதலாமவன் நான் தான். புத்த சிலைகள் தாக்கப்பட்டமை தொடர்பாக தகவல் கொடுத்த காரணத்துக்காக எனது செயலாளர் தாசிம் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. எங்கள் சமூகத்திலிருந்து இந்தத் தலையிடியைப் போக்குவதற்கு நாங்கள் செய்யக்கூடிய அத்தனை விடயங்களையும் செய்தோம், இன்னும் செய்துகொண்டுதானிருக்கிறோம்” என அமைச்சர் ஹாஷிம் மேலும் தெரிவித்தார்.

அலி சப்ரி பேசும் போது “தாக்குதல்களுக்குப் பின்னர் மொத்தமாக 2 மில்லியன் சமூகத்தின் மீதும் பழி போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிந்தனைப் பள்ளிகள் (மதராசாஸ்) அனைத்தையும் உடனடியாக உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவந்து கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டுமென்று நாம் பரிந்துரைத்தோம். இப் பள்ளிகளில் என்ன கற்பிக்கப்படுகின்றது, யார் யார் கற்பிக்கின்றார்கள் என்பன கண்காணிக்கப்பட வேண்டும். மசூதிகளில் மேற்கொள்ளப்படும் போதனைகளைக் கண்காணித்தல், நிக்காப் போன்ற ஆடைகளின் தடை என்பனவெல்லாம் அரசு கட்டளையிடும் முன்னரே நாம் சுயமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டோம்.  இந் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டம் சமமாகப் பிரயோகிக்கப்பட வேண்டும். நான் எப்போதும் ‘அரேபியனாக்கத்துக்கு’ எதிராகப் பேசி வருபவன். அதை முற்றாக ஒழித்துக்கட்டுவதெனெ நாம் முடிவெடுத்துள்ளோம்” என்றார்.

” ஒரு மனிதனாவது பயங்கரவாதத்தை நோக்கித் தள்ளப்பட அனுமதிக்கக் கூடாது. திகான தக்குதல்களுக்குப் பிறகு சஹாரனின் குழுவின் ஆட் சேர்ப்பு அதிகமாகவிருக்கிறது என அறியப்படுகிறது.அது தான் எங்களது அச்சம். சாதாரண மக்களை அவர்களிடம் தள்ளிவிட வேண்டாம். அதே வேளை பெரும் சமூகத்தின் கடமைகளும் இருக்கின்றன. உதாரணத்திற்கு சமய ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள் தேவையில்லை. ஒரு முஸ்லிம் பாடசாலைக்குச் செல்லும் ஒரு குழந்தை எப்படி ஒரு புத்த பிக்குவின் ஆடையைப் பற்றியோ அல்லது எஙகள் தமிழ்ச் சகோதரர்கள் வைக்கும் ‘பொட்டு’ பற்றியோ அறிய முடியும்? ஐந்து வயதில் தனிமைப்படுத்தப்பட்ட குழந்தையை 18 வயதில் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கலாம்?என்று அவர் வினாவெழுப்பினார்.

முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ராப் பேசும் போது “ஒரு சில பயங்கரவாதிகளின் செயலுக்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் தனிமைப்படுத்த வேண்டாம். உயிர்த்த ஞாயிறு தக்குதல்கள் தந்த அதிர்ச்சியிலிருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. கல்முனையிலிருக்கும் எனது தொகுதி மக்கள் இப்போதும் சட்ட அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். இவ் விடயத்தில் நாங்கள் இதைவிட இன்னும் செய்திருக்கலாம் என்பதை ஒத்துக்கொள்கிறோம். இது எங்கள் கண்களைத் திறந்துள்ளது. முழுச் சமூகத்தையும் வெறுப்புடனும் சந்தேகக் கண்களுடனும் பார்க்க வேண்டாம் என கெஞ்சிக் கேட்கிறேன்” என்றார்.