News & AnalysisSri Lanka

‘வெள்ளை வான்’ சம்பந்தமாக என்னிடமும் ஆதாரங்கள் உள்ளன – விக்கிரமபாகு கருணாரட்ண

மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் பிரபலமான வெள்ளை வான் கடத்தல் தொடர்பாக தன்னிடமும் ஆதாரங்கள் உள்ளதாக நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் டாக்டர் விக்கிரமாகு கருணாரட்ண கூறியுள்ளார்.

ஐ.தே.கட்சியின் ஆட்சியில் சிங்கள இளைஞர்கள் காணாமற் போனதையிட்டு பாத யாத்திரை சென்ற மஹிந்த ராஜபக்சவுக்கு தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் காணாமற் போனமை பற்றி எந்தவித இரக்கமுமிருக்கவில்லை.

டாக்டர் விக்கிரமபாகு கருணாரத்ன

கொழும்பு பிரிவின் முன்னாள் டி.ஐ.ஜி.யும் பின்னர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனெரல் ஆகப் பதவி மாற்றப்பட்ட புஜித் ஜயசுந்தர அவர்கள் வெள்ளை வான் பயங்கரவாதம் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டதாலேயே குருநாகலைக்கு சடுதியாக இடம் மாற்றப்பட்டார் என டாக்டர் கருணாரத்ன மேலும் தெரிவித்தார்.


நீண்ட காலத்துக்கு முன்னர் தமிழர் ஒருவர் கடத்தப்பட்டது தொடர்பாக அவரது சகோதரி கேட்டுக்கொண்டதையடுத்து தான் டி.ஐ.ஜி. புஜித் ஜயசுந்தரவுக்குத் தகவல் கொடுத்ததாகவும், அந்த இடத்திலேயே அவர் விசாரணைகளை ஆரம்பித்து கடத்தியவர்களை உடனேயே பிடித்துவிட்டிருந்தார் என்றும் அத்துடன் அவர் பல பாதுகாப்பு அதிகாரிகளையும் கைது செய்திருந்தார் என டாக்டர் கருணாரத்ன தெரிவித்தார்.

இருப்பினும், ‘ஒரு உயர் சக்தி’ கொடுத்த உத்தரவின் காரணமாக புஜித் ஜயசுந்தர கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டி நேரிட்டது எனவும் அதன் பிறகே அவர் குருநாகலைக்கு மாற்றப்பட்டார் எனவும் கருணாரத்ன தெரிவித்தார்.

ஐ.தே.கட்சியின் ஆட்சியில் சிங்கள இளைஞர்கள் காணாமற் போனதையிட்டு பாத யாத்திரை சென்ற மஹிந்த ராஜபக்சவுக்கு தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் காணாமற் போனமை பற்றி எந்தவித இரக்கமுமிருக்கவில்லை. இச் சூழலில் வெள்ளை வான் கடத்தல் மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.