‘ஜிஹாடி ஜாக்’ கின் பிரித்தானிய குடியுரிமையை பறிக்கப்பட்டது!
‘ஜிஹாடி ஜாக்’ என அழைக்கப்படும் முன்னாள் ஐசிஸ் உறுப்பினரும் இஸ்லாம் மதத்தைத் தழுவியவருமான பிரித்தானியரான ஜாக் லெட்ஸ் என்பவரது (பிரித்தானிய) குடியுரிமை பறிக்கப்பட்டது.
ஜாக் லெட்ஸ் ஐசிஸ் அமைப்பில் சேர்ந்துகொள்வதற்காக சிரியாவிலுள்ள ராக்கா என்னுமிடத்திற்குச் சென்றார். அப்போது அவருக்கு வயது 18. மே 2017 இல் இவர் துருக்கியிலிருந்து தப்ப முயற்சித்தபோது கைது செய்யப்பட்டார்.
24 வயதுடைய ‘ஜிகாதி ஜாக்’ பிரித்தானிய மற்றும் கனடிய இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்த போதும் தான் ‘பிரித்தானியாவின் எதிரி’ எனச் சூளுரைத்தவர். பின்னர் பிரித்தானியாவிற்குள் தன்னை அனுமதிக்குமாறும், தான் ஒரு போதும் பிரித்தானியர்களைக் கொல்லும் எண்ணத்தைக் கொண்டவனல்ல என்றும் கெஞ்சிக் கேட்டிருந்தார்.
இருப்பினும் பிரித்தானிய அரசு அவரது குடியுரிமையை மீளப்பெற்றுவிட்டது எனவும் இதனால் தற்போது கனடாவுக்கும், பிரித்தானியாவுக்குமிடையில் இராஜதந்திரப் பிணக்கு ஏற்பட்டுள்ளதெனவும் ‘மெயில் ஒன் சண்டே’ செய்தி வெளியிட்டுள்ளது.
