Sri LankaUncategorized

வட இலங்கை-சர்வதேச வர்த்தக கண்காட்சி-2026

வட இலங்கை – சர்வதேச வர்த்தக கண்காட்சி (NITE 2016 NORTHERN INTERNATIONAL TRADE EXHIBITION) ஆகஸ்ட் 28 முதல் 30 வரை யாழ் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. வட மாகாண ஆளுனர் வருகை தந்திருந்த இந்நிகழ்வில் 70 க்கும் மேற்பட்ட மருத்துவ, விவசாய, கைவினைத் துறைகளில் ஈடுபட்டுவரும் வடக்கின் தொழில் முனைவோர், முதலீட்டாளர், அபிவிருத்திப் பங்காளிகள் போன்றோர் தமது தொழில் முயற்சிகளையும், உற்பத்திகளையும் காட்சிப்படுத்தும் ஒரு மையமாக இக்காட்சிக்கூடம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அத்தோடு இம் மூன்றுநாள் நிகழ்வில் உள்ளூர்க் கலைஞர்களின் கலை நிகழ்வுகள், கருத்தாடல் நிகழ்வு ஆகியனவும் இடம்பெற்றன. அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (அமெரிக்கா) நிறுவியிருந்த காட்சிக்கூடத்தில் இவ்வமைப்பினால் இலங்கையில் பேற்கொள்ளப்பட்டுவரும் சமூக அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் பயிற்றப்பட்ட பலர் தமது தொழில் வல்லமைகளை வெளிக்காட்டும் பபலவகையான உற்பத்திகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர்.

வடக்கின் சுற்றுலா அபிவிருத்தி தொடர்பாக நடைபெற்ற கருத்தாடல் நிகழ்வில் இந்திய உப தூதர் திரு சாயி முரளி, ஜெட்விங் அதிபர் ஹிரான் கூரே மற்றும் தொழில்முனைவு நிறுவனமான ஜோர்ண் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி நர்த்தனா சத்தியமூர்த்தி ஆகியோர் தமது கருத்துக்களைப் பரிமாறியிருந்தனர். இக்கருத்தாடலை ஜெகன் அருளையா நெறிப்படுத்தியிருந்தார்.


யாழ்ப்பாணத்தின் பிரபல கலைக்கூடமாக இருக்கும் Dude Open Mic. இசை, நடன மற்றும் நகைச்சுவை நிகழ்வுகளை வழங்கியிருந்தது. சுத்தமான யாழ்ப்பாணத்து சோறு, கறி, ஐஸ் கிரீம் இத்தியாதிகளுடன் நிகழ்வு சிறப்புற நடைபெற்று முடிந்தது.

Credit: IMHO USA, Jekhan Aruliah