NewsWorld

அனோஜன் சிவாராஜாவிற்கு சவூதி அரசு மரணதண்டனை?

முகம்மது நபியை அவதூறு செய்தமைக்காக சவூதி அரேபியாவில் பணியாற்றிக்கொண்டிருந்த அனோஜன் சிவராஜா கைதுசெய்யப்பட்டதும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பில் 5 வருட சிறைத்தண்டனையும் அபராதமும் வழங்கப்பட்டதென்றும் அனோஜன் இத்தீர்ப்புக்கு எதிராக மேற்கொண்ட மேன்முறையீட்டின்பின் நீதிமன்றம் , நேற்று செப்டம்பர் 17, அவருக்கு மரணதண்டனை வழங்கியிருக்கிறதென்றும் கொழும்பு தினசரிகள் உறுதிப்படுத்தியுள்ளன.


இது தொடர்பாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், சாணக்கியன், கஜேந்திரகுமார், மனோ கணேசன் போன்றோருடன் சில சிங்கள அரசியல்வாதிகளும் இலங்கை அரசாங்கம் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிடவேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இலங்கை பத்திரிகைச் செய்திகளின்படி இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சு, சம்பந்தப்பட்ட சவூதி அரேபிய அரச அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகக அறியப்படுகிறது. இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு 5 நாட்களுக்குள் மரணதண்டனை நிறைவேற்றப்படும் என உறுதிசெய்யப்படாத இன்னுமொரு செய்தி கூறுகிறது.

அனோஜனுக்கு கருணை காட்டும்படி அவரது தாயார் கண்ணீருடன் வேண்டுகோள் விடுக்கும் காணோளி ஒன்றும் வலைத்தளங்களில் உலா வருகிறது. இதைவிடவும் உலகெங்கணுமிருந்து தனியார் பலர் தத்தம் அரசுகளுக்கும் வேண்டுகோள்களை அனுப்பிவருகின்றனர். அதே வேளை ‘சவூதி அரேபியாவில் வாழும் முஸ்லிம் சகோதரர்கள் ‘ என்னுமொரு குழுவினர் அனோஜன் மீது கருணைகாட்டும்படி சவூதி அரசிற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இது குறித்து கனடாவும் தலையிடவேண்டுமெனச் சில தமிழர்கள் கனடிய அரசிற்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை மேற்கொண்டிருந்த யாத்திரீகர் குழு ஒன்று கல்முனைக்குடியிலுள்ள அஷ்ரப் வைத்தியசாலைக்கு முன்னதாக தரித்து நின்றபோது இக்குழுவுடன் சென்றுகொண்டிருந்த ‘சுப்பிரமணியன்’ என்ற நாயை அங்குள்ள வர்த்தகர் ஒருவர் காலால் எட்டி உதைத்திருக்கிறார். இச்சம்பவம் ஜூன் 27, 2026 அன்று நடைபெற்றிருந்தது. இச்சம்பவத்தை சில மதவாதிகளும் சமூக வலைத்தளங்களும் இந்து – முஸ்லிம் பிரச்சினையாக ஊதிப் பெருக்கவைத்திருந்தனர். இது நடைபெற்றபோது அனோஜன் சிவராஜா சவூதி அரேபியாவில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அனோஜனும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இச்சம்பவத்தினால் கடும் கோபமுற்றிருந்த நிலையில் ‘முகம்மது நபி’ யைப்பற்றி அவதூறான கருத்தொன்றை தான் தனது ஜூலை 02, முகநூலில் பதிவிட்டிருந்ததாகவும் பின்னர் அதற்காக வருத்தப்பட்டு 10 நிமிடங்களில் அப்பதிவை நீக்கிவிட்டதாகவும் இது குறித்து தான் முஸ்லிம் சகோதரர்களுடன் மன்னிப்புக் கோருவதாகவும் சமூஅவலைத்தளம் மூலம் கோரிக்கை விட்டிருந்தார். இருப்பினும் இவ்விடயம் சவூதி அரேபிய அரசிற்கு எட்டிவிட்டது. அதைத் தொடர்ந்து அனோஜன் மீது வழக்கு பதியப்பட்டது. (Image Credit: Hiru News).