Spread the love

கோவிட்-19 நோய்த் தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளினால் வருமானம் பாதிக்கப்பட்ட திரைத்துறையின் தினக்கூலிப் பணியாளர்களுக்கு உதவும் முகமாக இந்தியாவின் பிரபல நட்சத்திரங்கள் ‘We Are One Family’ என்ற குறும்படமொன்றைத் தயாரித்துள்ளனர்.

கறுப்பு-வெள்ளையில் தயாரிக்கப்பட்ட இப் படத்தில் அமித்தாப் பச்சன், மம்முட்டி, ரஜினி, பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிக்கிறார்கள். பல முன்னணி வர்த்தகர்களின் நிதிப் பங்களிப்பில் உருவாகியிருக்கும் இப் படம் ‘நாங்கள் ஒரு குடும்பம் (We Are One Family)’ என்ற தலைப்புடன் இப்படம் வெளியாகியிருக்கிறது.

அமித்தாப் பச்சன் வீட்டில், தனது கறுப்புக் கண்ணாடியைத் தேடுவதாக ஆரம்பிக, இதர பிரபல நட்சத்திரங்களும் அவருடன் சேர்ந்து தேடுவது தான் கதை.

அமித்தாப் பச்சான், ரஜினிகாந்த், பிரியங்கா சோப்ரா, சிரஞ்சீவி, அலியா பாட், ரன்பிர் கபூர், மம்முடி, மோஹன்லால், சிவராஜ்குமார், ப்றொசெஞிட் சட்டர்ஜி, சோனாலீ குர்கானி மற்றும் டில்ஜித் டோசாஞ் ஆகியோர் நடிக்கிறார்கள். கல்யாண் ஜுவெல்லர்ஸ் இதன் பிரதான நிதி ஆதரவாளர்.


படம் முழுவதும் கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருக்கிறது எல்லாக் காட்சிகளுமே அந்தந்த நடிகர்களின் வீடுகளில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒளிச் செறிவு ஒவ்வோர் வீடுகளிலும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது (சீரான ஒளிச்சூழல் திரைப்படத்தின் ஒரு முக்கிய அம்சம்) என்பதனால் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. நடிகர்களின் செல்வச் செருக்கும், கருப்புப்பணத்தின் மகிமையும்கூட கருப்பு வெள்ளையில் சமத்துவம் பெற்றுவிடும் என்பதும் இதன் இரண்டாம் கருபொருளாகவும் இருக்கலாம்.

படத்தின் முடிவில், ‘தான் ஏன தனது கண்ணாடியைத் தேடினேன் என்பதைக் கூறுவதாகப் படம் முடிகிறது. வீட்டை விட்டு வெளியேறும் நோக்கம் அவருக்கு இருக்கவில்லை, ஆனாலும் அவர் தன் கறுப்புக் கண்ணடியைத் தேடுகிறார் என்பது தான் இங்கு சஸ்பென்ஸ்.

கோவிட்-19 இந்தியக் குடிமக்களின் வாழ்வாதரங்களைப் பெரிதும் சீர்குலைத்து வரும் இவ்வேளையில், திரைப்படத்துறையும் தன் ஒளிப் பயணங்களை நிறுத்திக்கொண்டுள்ளது அதன் மூலம் வருமானம் பெற்றுக் குடும்பங்களை ஓட்டிய பலருக்கு பாரதூரமான வருமான இழப்புக்களைக் கொடுத்து வருகிறது.இது ஒரு குறும்படம் தான். நவீன ஓவியங்களைப் போல் இதுவும் தன் வரையறைக்குள் சொல்ல வரும் செய்தி மகத்தானது என்பதில் சந்தேகமில்லை. அச் செய்தி என்னவாகவிருக்கும் என்பதை உய்த்தறிய உங்கள் பெரு மதிகள் முனையட்டும்.

இதில் சிறப்பம்சம், அத்தனை நடிகர்களும் தமது சொந்த மொழிகளில் பேசுகிறார்கள். நம்ம ரஜினி மட்டும் என்ன அவரது சொந்த மொழியான தமிழில், அவரது ஸ்டைலில், அசத்துகிறார். ‘என்ன சட்ட மன்றத் தேர்தலில் வெற்றியா? அதெல்லம் சரிப்படுவரும் ராஜா’ என்ற பாணியில் இருக்கிறது அவரது வசனங்கள்!

Related:  'டாஸ்மாக்' திறக்கப்படுமானால் மீண்டும் பதவிக்கு வருவதை மறந்துவிடுங்கள்! - ரஜினி

படம் ஐந்தே நிமிடங்கள் தான். மம்முட்டியின் மகனும், மலையாளத்தில் பிரபல நடிகருமான டுல்கெர் சல்மான் தனது வீட்டில் உத்தேசிக்கப்பட்ட கோணங்களில் சில காட்சிகளை ஒளிப்பதிவு செய்செய்து மற்றய நடிகர்களுக்கு அனுப்பிவிட அவர்கள் அதே தரத்துக்கு தமது காட்சிப் பதிவுகளையும் செய்துள்ளார்கள் எனத் தெரிய வருகிறது.

இக் குறும்படம் ஒரு கரும் படமெனினும், சிலா வந்த செய்தி பாரியது. அதை நறுக்கென்று சொல்லி கொறோனாவால் ஓரங்கட்டப்பட்டு ஒளித்திருக்கும் எங்களுக்கு ஒளியால் நறுக்கென்று சொல்லித் தருகிறது.

குறுகத் தறித்த குறளின் வடிவத்தில் நெய்யப்பட்டிருக்கும் – Family Made At Home – படம் வித்தியாசமானது.

நம்மாட்கள் யோசிக்கிறாங்கள் என்பது பெருமையாகவிருக்கிறது. படத்தைக் கீழே பாருங்கள்.

Print Friendly, PDF & Email