Spread the love



Update | ஒன்ராறியோ கோவிட்-19 நிலவரம்

புதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 24, 2020 வெள்ளிக்கிழமை 11:00 மணி

  •  ஒன்ராறியோவில் 640 புதிய தொற்றுக்கள் பதியப்பட்டுள்ளன.
  • தற்போதய மொத்தம் 13,519
  • இதுவரை ஏற்பட்ட மரணங்கள் – 763 (+50 –  ஒரு நாள் அதிகரிப்பில் இதுவே உச்சம்!)
  • இதுவரை குணமாகியவர்களின் எண்ணிக்கை 7,087 (நோய் தொற்றியவர்களில் 52.%)
  • ஒன்ராறியோ மாகாணம் இதுவரை 207,040 நோயாளிகளைப் பரிசோதித்திருக்கிறது
  • மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் 910
  • தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலுள்ளவர்கள் 243
  • சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளவர்கள் 193
  • நெடுநாட் பராமரிப்பு நிலையங்களில் ஏற்படும் தொற்றுக்கள் அதிகரித்தவண்ணமுள்ளன
  • நெடுநாட் பராமரிப்பு அமைச்சின் பிரகாரம், இதுவரை 131 நிலையங்களில், 573 (+57) மரணங்கள் நடைபெற்றுள்ளன
  • நெடுநாட் பராமரிப்பு நிலையங்களில் உறுதிப்படுத்தப்பட்ட 2,287 தொற்றுக்களில்,  1,089 பேர் சேவைப் பணியாளர்கள் (48%)

இத் தரவுகளில் சில வித்தியாசங்கள் இருக்கலாமென அமைச்சு அதிகாரிகள் ஒத்துக்கொள்கின்றனர். காரணம், மாகாணத்தின் சுகாதாரத் திணைக்களத்தின் தரவு மையம் (iPHIS) கணிப்பதற்கும், நெடுநாட் பராமரிப்பு அமைச்சின் (MOLTC) தரவு மையம் கணிப்பதற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன.

புதனன்று, நெடுநாட் பராமரிப்பு நிலையங்களைக் கண்காணிப்பதற்கும் அவர்களுக்கு உதவிபுரிவதற்குமென, மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் அவர்கள் கனடிய இராணுவத்தின் உதவியைக் கோரியுள்ளார். மிகவும் மோச்மாகப் பாதிக்கப்பட்ட நிலையங்களுக்கு இவ்வுதவியை வழங்குவதாக நேற்று (வியாழன்) மத்திய அரசு உடன்பட்டுள்ளது.

 

ஒன்ராறியோ முதல்வர் மாகாண நிலவரம் பற்றி ஊடகங்களுக்குச் செவ்வி வழங்கியபோது, “மாகாணம் இவ் விடயத்தில் இதை விட அதிகமாகச் செய்ய முடியும்” எனக் கூறியதன் மூலம் நிர்வாகத் தவறுகள் நடைபெற்றிருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இதைக் கூறும்போது அவரது குரல் தழு தழுத்தது.  

இதர நாடுகளைப் போலவே, கனடாவிலும் கோவிட் பேரிடரின் பெரும் சுமையைத் தாங்குபவர்கள் முன்னணிச் சுகாதார சேவைப் பணியாளர்கள். ஒன்ராறியோவில் 1,732 பணியாளர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள், இது மொத்த எண்ணிக்கையின் 12.8% மாகும்.

ஒன்ராறியோ மாகாணத்தின் பொதுச் சுகாதார சேவைகள் வழங்கும் (மருத்துவ மனைகள் உள்ளிட்ட) நிலையங்களில் 59.1% ரொறோண்டோ பெரும்பாகத்திலேயே உள்ளன.

  • ஆண்கள் – 5,640 (41.7 %)
  • பெண்கள் – 7,737 (57.2 %)
  • 19 வயதுக்குக் குறைந்தவர்கள் – 292 (2.2 %)
  • 20-39 வயது – 3,052 (22.6 %)
  • 40-59 வயது 4,108 (30.4 %)
  • 60-79 வயது 3,029  (22.4 %)
  • 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் – 3,029 (22.4 %)

தற்போது பரிசோதிக்கப்பட்டு பெறுபேறுகளை எதிர்பார்த்து இருப்பவர்கள் – 5,414

Related:  கோவிட்-19 தொற்றைத் தவிர்க்க ஹைட்ரொக்சிகுளோரோகுயின் எடுக்கிறேன் - ஜனாதிபதி ட்ரம்ப்

நேற்றய எண்ணிக்கைகளைவிட இன்று 5% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இத் தரவுகள் வியாழன் பி.ப. 2:00 மணிவரையிலானவை.

 
 
 
Print Friendly, PDF & Email