Arts & Entertainment

Tourist Family

பரம் ஜி.

அபிஷான் ஜீவிந்த் தமிழில் எழுதி இயக்கியுள்ள Tourist Family திரைப்படம் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.

யாழ்ப்பாணம், வல்வெட்டித் துறையில் இருந்து வறுமையின் நிமித்தம் அகதிகளாக தமிழகம் வரும் ஒரு குடும்பம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி, பயங்கரவாதம் உட்பட, திரைக் கதையை இயன்ற அளவில் வழமையான தமிழக சினிமா பாணியில் திரையில் சொல்லப் பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.


சசிகுமார், சிம்ரன், எம்எஸ் பாஸ்கர், பக்ஸ், யோகிபாபு என தமிழக சினிமா துறையில் பரிச்சயமான நடிகர்கள் பலர் பங்கெடுத்துள்ள இத்திரைப்படம் பல கிளைக்கதைகளை கொண்டிருந்த போதும் சொல்லப்பட்ட கதை நல்ல பின்னணி இசை சேர்த்து மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை வரவேற் கலாம்,சில பாடல்களையும் குறைத் திருக்கலாம்.

இடிக்கும் விஷயம், பேசப்படும் யாழ்ப்பாணத் தமிழ்.

எனது அறிவுக்கு எட்டிய வரையில் யாழ்ப்பாணத் தமிழை முன்னிலைப் படுத்தி எடுத்த திரைப்படங்களில் வியாபார ரீதியாக வெற்றி பெற்ற கன்னத்தில் முத்தமிட்டால், தெனாலி திரைப் படங்களுக்குப் பிறகு வெற்றி பெற்றிருப்பது Tourist Family என்று சொல்லலாம்.

யாழ்ப்பாணத்தமிழர்கள் பற்றிய திரைப்படம் எடுப்பதாக சொல்லி சரியான முறையான தேடல்கள் இன்றி நுனிப்புல் மேய்ந்து, சிறந்த தகுந்த யாழ்ப்பாண கலைஞர்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளாமல் அந்த அழகிய தமிழை நாறடித்த உச்ச நட்சத்திர இயக்குனரும், உலக்கை நாயகனும் போலல்லாமல், இந்த திரைப்படத்தின் இயக்குனர் எடுத்த முயற்சிக்கு இயன்றவரையில் நடிகர் சசிகுமார் மற்றும் அவரது மகனாக நடித்த மித்துன் ஜாய்சங்கரும் சிறப்பாக முயற்சித்து இருப்பதை நிச்சயம் பாராட்டலாம்.

திரைக்கதை அமைக்கும் போது முறையாக இலங்கையில் பேசப்படும் பிராந்திய தமிழ் பேச்சு மொழி பற்றி ஆய்வு செய்து அறிந்திருந்தால், யாழ்ப்பாண தமிழரான சசிகுமார் திருமணம் செய்திப்பது மலையக தமிழ் பேசும் சிம்ரன் என சொல்லி இருந்தால் சிம்ரனுக்காக இரவல் குரல் தந்தவர் யாழ்ப்பாணத் தமிழை கொலை செய்யா மல் தவிர்த்திருக்கலாம் அல்லது ஒரு யாழ்ப்பாண தமிழ் பேசும் பெண்ணுக்கு அந்த சந்தர்ப்பத்தை கொடுத்திருக் கலாம்.

யாழ்ப்பண பேச்சுத் தமிழை தமிழக தமிழர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என முட்டாள் தனமாக வக்காலத்து வாங்குவதை விட்டு, இதய சுத்தியுடன் யாழ்ப்பாண வட்டார பேச்சுத்தமிழில் திரைப்படம் எடுக்க விரும்பினால் தெரியப் படுத்துங்கள், இலவசமாக வந்துகூட உங்களுக்கு சொல்லித்தர தயாராக இருக்கிறோம். (Source: https://www.facebook.com/paramg.gnanaswaran)

.