Spread the love
கனடா மூர்த்தி
Terminator: Dark Fate | திரை விமர்சனம் 1
‘Terminator’ Moorthy

‘ஹொலிவூட் எந்திரன்’ ஆர்னோல்ட் ஸ்வாஷ்னேகர் நடிக்க, பிரமாண்ட இயக்குனர் ஜேம்ஸ் கெம்ரூன் (‘Aliens, Avatar, Titanic இன்னும் பல பிரமாண்ட படங்கள் ) தயாரிப்பில் இன்று நவம்பர் 1 வெளியாகியிருக்கும் “Terminator: Dark Fate” படத்தை தியேட்டருக்குப் போய் முதல்நாளே பார்த்து ஜென்ம சாபல்யம் பெற்றாயிற்று. படம்.. அட்டகாசமாக இருந்தது. ஜேம்ஸ் கெம்ரூன் என்றால் சும்மாவா..

Terminator பட வரிசையில் இந்த “Terminator: Dark Fate” 6வது படம். 3ம்,4ம் 5ம் படங்களை ஒதுக்கிவிட்டு, முதலில் வந்த இரண்டு Terminator படங்களின் நேரடித் தொடர்ச்சியாக இந்தப் படம் போகிறது. ரோபோவுக்கும் வயசாகும் என்று நிரூபிப்பதுபோன்ற தோற்றத்தில் வருகிறார் ஆர்னோல்ட் ஸ்வாஷ்னேகர்!.. “மின்சார கண்ணா! எல்லார்க்கும் உன்னை ஏன் பிடிச்சிருக்கு தெரியுமா வயசானாலும், உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல கண்ணா..”

கதை? இயந்திர மனிதர்கள் (1) எதிர்காலத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்து (2) நிகழ்காலத்தை மாற்ற எத்தனிப்பதன் மூலம் (3) எதிர்காலத்தின் வரலாற்றை மாற்றுவதற்காக நடக்கும் (4) மோதல்கள்தான் படத்தின் கதை. விஞ்ஞானக் கட்டுக்கதை; Science fiction action.

இந்தத் தொடரின் முதல்படமான “The Terminator” (T1) 1984ல் வெளி வந்தது. (அதில் வரும் ரோபோ ஸ்வாஷ்னேகர் 2029 ஆண்டிலிருந்து வந்திருக்கும்.) அதன் தொடர்ச்சியாக வந்த “Terminator 2: Judgment Day”யில் உலகை அழிவிலிருந்து காப்பாற்ற, ஸ்வாஷ்னேகர் T-800 என்ற ரோபோவாக – நல்லவனாக – வந்து சாரா கோன்னரையும் மகன் ஜோனையும் ‘காப்பான்’. பிறகு முன்பு 1998ல் காப்பாற்றிய அதே ஜோனை அதே T-800 ஸ்வாஷ்னேகர் கொல்வதுடன் இந்தப் படம் ஆரம்பமாகிறது. (கட்டப்பா)

22 வருடங்கள்இன் பின் 2020ல் மீண்டும் ஒரு பயங்கர ரோபோ (பெயர்: Rev9) 2042ம் ஆண்டிலிருந்து வருகிறது. Rev-9 கொல்ல வருவது டானி ராமோஸ் Dani Ramos என்ற பெண்ணை… காரணம்? எதிர்காலத்தில் மனிதகுலத்தை ரோபோக்களிடமிருந்து காக்கும் விடுதலை போராளியாக இந்த டானி வருவாள் என்பதால் அதைத் தடுக்க… ! டானியை காப்பாற்ற எதிர்கால சுப்பர் ஸோல்ஜரான கிரேஸ் -Grace என்ற புதுவகை உண்மை மனித ரோபோ அதே 2042ம் ஆண்டிலிருந்து வருகிறாள்.. Rev-9 டானியை கொல்ல வர அதை சாரா கோன்னர் தடுக்கிறாள்..(ஏதாவது புரிகிறதா?)

ஆனால் படம் விறுவிறுப்பாக போகிறது… காரில் சண்டை.. ப்ளேனில் சண்டை… தண்ணீரில் சண்டை.. வெடிகுண்டுகள்.. சதக் சதக் கொலைகள்… F*** கெட்ட வார்த்தைகள்.. ரோபோக்களின் அகோர தாக்குதல்கள்… பிரளயங்கள்… “குழந்தைகள் படத்தை பார்க்கலாமோ?” என்ற கேள்வி வந்தால் ஆச்சரியமில்லை.. T2-Judgment Day படத்தை விட விறுவிறுப்பு… A Terrifying Thriller…! அதற்காக படம் வன்முறையைத்தான் தூண்டுகிறது என்று சொல்ல முடியாதவாறு….

Related:  சூர்யாவை மாட்டிய 'சூரரைப் போற்று' - பொலிஸ் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

படத்தில் குடும்பப் பெறுமானங்கள் குறித்து நெகிழ வைக்கும் காட்சிகள் உண்டு.. விடுதலைப் போர் குறித்த முழக்கங்கள் உண்டு.. இயல்பான சுஜாதா பாணி நகைச்சுவை வசனங்கள் .உண்டு. (உதாரணத்துக்கு “When are you coming from?” என்ற கேள்வி.. “Metal Mother F***er”என்ற வசவு)

T1படத்தை 1986ல் VHS கசெட்டில்தான் பார்த்தேன். அதன்பின் 1991ல் “Terminator 2: Judgment Day”வந்தபோது அதை மொன்ரியால் நகரில் திரையில் பார்த்தேன்… T2 ஒரு மைல் கல். (எப்படி ரஜனிக்கு ஒரு ‘பாட்ஷா’வோ அதேபோல அர்னோல்ட்டுக்கு Terminator 2..!) அதன்பின் சிங்கப்பூரில் T3: ‘Rise of the Machine’s (2003), ‘Terminator Salvation’ (2009). பிறகு ரொறன்ரோவில் ‘Terminator Genisy’s (2015). மூன்றும் முதல் நாள்! இப்போது மீண்டும் ரொறன்ரோவில் Dark Fate! முதல் நாள்! ஹாஹாஹா…

படம் குறித்து ஆயிரம் கருத்துக்கள் இருக்கட்டும்… (மனித) “இனம் அழிந்துவிடாது..” “வீரமும் சுதந்திர தாகமும் என்றும் மனிதரின் இயல்பு” என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்தப் படம்…! மீண்டும் பார்க்கப் போகிறேன்…
(எதிர்காலத்திலிருந்து ஏதாவது ரோபோ இலங்கை வராதா என்ன..?)

Print Friendly, PDF & Email
Terminator: Dark Fate | திரை விமர்சனம்

Terminator: Dark Fate | திரை விமர்சனம்