கனடிய அரசு, இலங்கை அதிகாரிகள் மீது பிறப்பித்துள்ள இலக்கு வைக்கப்பட்ட தடைகளைக் கனடியத் தமிழர் பேரவை வரவேற்கிறது !

இன்று ஜனவரி 10, 2022, சிறப்புப் பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் (SEMA) கீழ் மனித உரிமை மீறல்களுக்காகப் இலங்கை அரசில் பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்த நான்கு இலங்கையர்கள் மீது கனடிய அரசு இலக்கு

Read more

யாழ் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்குப் பத்து மில்லியன் பெறுமதியான மருந்துகள் கனடியத் தமிழர்களால் நன்கொடை !

கனடியத் தமிழர்கள் பத்து மில்லியன் ரூபா பெறுமதியான உயிர் காக்கும் மருந்துகளைத் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கனடியத் தமிழர் பேரவை, ஆண்டு தோறும் நடாத்தும் நிதிசேர் நடை பவனி ஊடாகப் பல்வேறு

Read more

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குங்கள் – இலங்கை அரசுக்கு கனடிய தமிழர் பேரவை 10 அம்சக் கோரிக்கை

போர் முடிவுற்று 13 வருடங்களாகியும் தமிழ் மக்களது அபிலாட்சைகள் குறித்து இலங்கை அரசு கவனமெடுக்கத் தவறியுள்ளமையைச் சுட்டிக்காட்டி இலங்கை அரச தலைவர்கள் மற்றும் பொறுப்புள்ள அதிகாரிகளுக்கு கனடிய தமிழர் பேரவை கடிதமொன்றை அனுப்பியுள்ளது. கனடிய

Read more

தடைநீக்கத்தைக் கனடிய தமிழர் பேரவை வரவேற்கிறது  

உறுதியான தொடர் நடவடிக்கைகளுக்கு அழைப்பு  அறிவித்தல் புலம்பெயர் அமைப்புகள் சில தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதைக் கனடிய தமிழர் பேரவை வரவேற்கிறது. ஆயினும் உறுதியான தொடர் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறது. இலங்கையில் இன உறவுகள் மற்றும் பொருளாதார

Read more

முதற் தடவையாக கனடியத் தமிழர் பேரவையின், உணவு வங்கிக்கான தமிழ் மரபுரிமைத் திங்கள் காலப் பங்களிப்பு

தொடரும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் காரணமாக, மக்களுக்குச் சேவை செய்வதில் உணவு வங்கிகள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான சங்கடங்களை உணர்ந்து கனடியத் தமிழர் பேரவை (CTC),2022 ஆம் ஆண்டில் தனது முதற் தமிழ் மரபுரிமைத் திங்கள் உணவு இயக்கத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.இந்த ஆண்டு உணவு இயக்கத்திற்கான பயனாளியாக யோர்க் பிராந்தியத்தின் உணவு வங்கியைக் கனடித் தமிழர் பேரவை தேர்ந்தெடுத்திருந்தது. இந்த உணவு வங்கி, யோர்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள பல நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட குடும்பங்களுக்கு உணவுச் சேவையை வழங்கி வருகிறது. மிகக் கடுமையான குளிர் காலநிலை இருந்தபோதிலும், ஜனவரி மாத நாட்களில், தமிழ் மரபுரிமைத் திங்கள் உணவு இயக்கம் 7,564 கனடிய டொலர்களை சேகரித்திருந்தது. இந்த நிதியில் பணம், உணவுப் பொருட்கள் ஆகியவை உள்ளடங்கியிருந்தன. வெள்ளிக்கிழமை ஜனவரி 28,2022 அன்று, கனடியத் தமிழர் பேரவையின், தமிழ் மரபுரிமைத் திங்கள் உணவு இயக்க உறுப்பினர்கள் திரட்டப்பட்ட நிதியையும், உணவுப் பொருட்களையும் நோர்க் பிராந்தியத்தின் உணவு வங்கியின் நிறைவேற்றுச் செயலர் அலெக்ஸ் பிலோட்டாவிடம் ஒப்படைத்தனர். கனடியத் தமிழர் பேரவையின் துணைத் தலைவர் ரவீனா ராஜசிங்கம் இந்த உணவு இயக்கத்துக்கு ஆதரவளித்த நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தார். மற்றும் இந்த முயற்சியில் பங்கெடுத்த கனடிய பல்லினக் கலாச்சார அவைக்கும், ஒன்ராறியோவுக்கான ஆசியர்கள் அமைப்புக்கும் ரவீனா மேலதிக சிறப்பு நன்றிகளைத் தெரிவித்தார்.

Read more