Smart Phone-எதை வாங்குவது? -

Smart Phone-எதை வாங்குவது?

Spread the love

சிவதாசன்

பாடசாலை ஆரம்பித்ததும் ஸ்மார்ட் ஃபோன் நிறுவனங்களுக்குத் தீபாவளி தான். நான் முந்தி நீ முந்தி என்று தங்கள் ஃபோன் கடைகளை விரித்து விடுகிறார்கள். காப்புக் கடைகள், சேலைக் கடைகள் போல எல்லாப் பண்டங்களும் அழகாகத்தான் இருக்கும், எல்லாவற்றையும் வாங்குவதற்கும் ஆசைதான். ஆனால்…

ஃபோனில் தேவைப்படும் முக்கிய அம்சங்கள்

ஒரு ஸ்மார்ட் ஃபோனில் என்ன அம்சம் உங்கள் தேவைக்கு முக்கியமானது என்பதைப் பொறுத்தே உங்கள் தெரிவு இருக்க வேண்டும். பெரும்பாலானவர்களுக்கு சிறந்த கமரா தேவை. சிலருக்கு சிறந்த வழிகாட்டி (satnav) தேவை, சிலருக்கு ஈ-மெயில், சிலருக்கு சமூக வலைத் தளம், சிலருக்கு விளையாட்டுக்கள் (games), சிலருக்கு டிஜிட்டல் வலட் (digital wallet), சிலருக்கு வீடியோ, சிலருக்கு இன்ரெர்னெட்…

எல்லோரையும் திருப்திப்படுத்தும் ஒரே போன் இன்னும் பிறந்து வரவில்லை. உள்ளதுக்குள் வள்ளிசாக ஒன்று என்றால்…

ஐ ஃபோனா அல்லது சாம்சுங்கா?
திரை (Screen)

போன்களில் எனக்குப் பிடித்த முதலாவது அம்சம் ஸ்கிறீன். edge-to-edge, அதாவது போனுக்கு விளிம்பு என்பதே இல்லாதவாறு ஸ்கிறீன் முகப்பு முழுவதையும் ஆக்கிரமித்திருக்கும். அத்ற்குள் கண்ணாடி முகப்பின் ஓரங்கள் வளைந்து வேறு. ஏதோ 50″ தொலைக்காட்சித் திரையைப் போன்ற ஒரு feeling.

பற்றரி ஆயுள் (Battery Lifw)

ஃபோனின் இந்த அம்சம் என்றைக்குமே மாறியதில்லை, தொடர்ந்தும் முன்னேற்றம் கண்டே வருகிறது. எத்தனை மணித்தியாலத்துக்கு மின் வலு தாக்குப்பிடிக்கும். இந்த விடயத்தில் பல விடயங்கள் கவனத்துக்கெடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

ஒரு ஃபோனில் எத்தனை அப்பிளிகேசன்கள் (apps) பின்னணியில் இயங்கிக்கொண்டிருக்கிறது, ஃபிளாஷ் லைட் பாவனை, ஸ்கிறீன் துல்லியம் (Screen resolution), ஸ்கிறீன் பிரகாசம் (Screen Brightness) போன்ற பல காரணங்களினால் பற்றரறியின் ஆயுள் விரைவில் காலாவதியாகிவிடுகிறது. எனவே எந்த ஃபோன் நிறுவனம் தனது ஃபோன் 24 மணித்தியாலங்களுக்கு சார்ஜ் இறங்காது என்று சொன்னாலும் அது கிட்டத்தட்ட அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளைப் போலத்தான். உங்கள் ஃபோனைத் தொட்டுப் பாருங்கள். சூடாக இருந்தால் ஏதோ அப் பற்றரியின் சாற்றை உறிஞ்சிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். உடனே airplane mode இற்கு மாற்றிவிடுங்கள், கொஞ்சமாவது சேமிக்கலாம்.

ஒப்பெறேற்றிங் சிஸ்டம் (Operating System)

ஸ்மார்ட் ஃபோன்களில் இரண்டு ஒப்பெறேற்றிங் சிஸ்டம்கள் (கட்டளைத் தொகுதி) பாவிக்கப்படுகின்றன. அவற்றின் தொழில் உங்கள் கட்டளைகளைப் ஃபோன்களைக் கொண்டு செவ்வனே நிறவேற்றுவது. இந்த இரண்டில் ஒன்று ஐஓஎஸ் (iOS) எனப்படும் அப்பிள் ஃபோன்களில் மட்டும் (இதர அப்பிள் பண்டங்களிலும் தான்) வேலை செய்யும். மற்றது அன்ட்றாயிட் (Android). இது சாம்சங், கூகிள் போன்ற இதர ஃபோன்கள் எல்லாவற்றிலும் வேலை செய்யும்.

Related:  டெங்கு ஒழிப்பிற்கு 'ட்றோண்' தொழில்நுட்பம் | இலங்கை யோசனை!

இரண்டும் ஒன்றுக்கொன்று சளைக்காதவை என்றாலும் எதற்குச் சிறப்பான அப்பிளிகேசன்கள் சந்தையில் இருக்கின்றன என்பதும் சிலருக்கு எந்த ஃபோனைத் தேர்ந்தெடுப்பது என்பதற்குக் காரணமாக அமைகிறது. அனேகமான அப்பிளிகேசன்கள் மூன்றாம் தரப்பினால் எழுதப்படுபவை. அண்ட்றோயிட் டை அதிக நிறுவனங்களின் ஃபோன்கள் பாவிக்கின்ற படியால் அதற்கு அப்ஸ் எழுதப்படுவது அதிகம் என்பார்கள்.

கமரா Camera

இனி வரும் காலங்களில் முகத்தை ஸ்கான் செய்யும் தொழில்நுட்பம் எல்லோர் வாழ்விலும் மிக முக்கிய பங்கேற்கப் போகின்ற படியால் மிகவும் துல்லியமான படங்களை (சுய படங்களை நீங்கள் அனுப்பினால் தான் வங்கியின் ATMஉங்களுக்குப் பணம் தரும் என்கின்ற நிலைமை) எடுக்க வேண்டிய கடமை ஃபோன்கள் மேல் அரச பாதுகாப்பு நிறுவனங்களினால் சுமத்தப்பட்டு விட்டது. எனவே எந்த ஃபோன் துல்லியமாக உங்கள் படத்தை எடுத்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்ப வல்லதோ அந்த ஃபோனை நீங்கள் வாங்காது தவிர்க்கலாம் (?).

அனேகமான ஃபோன்களின் கண்ணாடிகள் தடிப்பாக இருக்கும்போது அவற்றின் கமராக்கள் ஆழத்துக்குப் போய்விடுவதால் விரிவான கோணத்தில் படங்களை எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் புதிய சில ஃபோன் நிறுவனங்கள் புதிய உத்திகளைத் தமது டிசைனில் பாவித்திருக்கின்றனர்.

முக அடையாளம் (Facial Recognition) மட்டுமல்ல கை ரேகை போன்ற அடையாளங்களை அறியும் அம்சங்களும் உங்கள் நாளாந்த வாழ்வுக்கு அத்தியாவசியமான ஃபோன்களின் முக்கிய அம்சங்களாக மாறிவிட்டன.

தொடரும்…
Print Friendly, PDF & Email
Please follow and like us:
error