நோய்த் தொற்றுக்கானPCR பரிசோதனையை மேற்கொண்ட தாதி ஒருவரை மிக மோசமாகத் தாக்கிய பிக்கு ஒருவரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தின்போது, ஆனைமடு ஆதார வைத்தியசாலையில், பிக்கு ஒருவர் மீதுPCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் வலியைத் தாங்கமுடியாத பிக்கு தட்டொன்றால் தாதியின் தலையில் அடித்ததால் தாதி மயங்கி வீழ்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனைமடு குமரகம விகாரையைச் சேர்ந்த இப்பிக்குவைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட தாதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் இப்போது குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாகவும் ஆனைமடு ஆதார வைதியசாலை சுகாதார அத்தியட்சகர் பத்மினிஅபயரத்ன தெரிவித்துள்ளார்.