Obituary : Peanut the Squirrel
கடந்த மாதம் அமெரிக்காவின் நியூ யோர்க் மாநில அரசு இரண்டு படுகொலைகளைச் செய்தது. படுகொலைகளும் அமெரிக்காவும் பிரிக்கமுடியாத தோழர்கள் என்பது தெரிந்த விடயமெனினும் இவ்விரு படுகொலைகளும் அனியாயமானவை.
மார்க் லொங்கோ ஒரு நியூ யோர்க் வாசி. பீநட் என்ற அணிலும் ஃபிறெட் என்ற ரக்கூனும் அவரது செல்லப் பிராணிகள். இன்ஸ்ராகிராமில் ஏறத்தாழ 900,000 அடியார்களை வைத்திருக்குமளவுக்கு பீநட் உலகத்தின் செல்லப்பிள்ளை. கண்பட்ட காரணமோ என்னவோ பீநட்டின் உயிருக்கு ஆபத்து வந்தது.
லொங்கோவின் பண்ணையில் பீநட்டும் ஃபிறெட்டும் சந்தோசமாக உலா வருவது சில அயலவர்களுக்குப் பிடிக்கவில்லை. வன விலங்குகளை வீட்டில் வளர்ப்பதாக நியூ யோர்க் சூழல் பாதுகாப்பு திணைக்களத்துக்கு அவர்கள் புகார் செய்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் லொங்கோ வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள் பீநட்டையும் ஃபிறெட்டையும் ‘கைது செய்து’ கொண்டு செந்றார்கள். அனுமதி இல்லாமல் வன விலங்குகளை வீட்டில் வைத்திருக்கக்கூடாது என்பது மாநில சட்டமாம்.
ஆனால் விதி வேறு வழியில் வந்தது. தனது கைதினால் ஆத்திரமடைந்த பீநட் அதிகாரி ஒருவரைக் கடித்து விட்டது. பீநட்டில் றேபீஸ் வியாதி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் திணைக்களத்தின் ஏவுதலின் பிரகாரம் அதிகாரிகள் பீநட்டையும் நண்பன் ஃபிறெட்டையும் நச்சூசி போட்டுக் கொலை செய்துவிட்டார்கள்.
இவ்விரு விலங்குகளிலும் றேபீஸ் வியாதி இருந்ததா என்பதைப் பரிசோதிப்பதற்கு அவற்றிந் உடல்கள் ஆய்வுகூடத்திற்கு அனுப்பபட்டன. அதன் பதில் கடந்த செவ்வாயன்று வந்தது. இரண்டு விலங்குகளிலும் றேபீஸ் இல்லை.
அமெரிக்காவில் மனிதர்களைவிட விலங்குகள் நாகரிகமானவை.
R.I.P. Peanut and Fred! (Image Credit: Tasty Live)
