Entertainmentமாயமான்

‘Not All Answers are Found in Google’ – குறும்படம்


விமர்சனம்

இயக்குனர் ட்றைடன் வீ.பாலசிங்கம்

பல கண்டங்களையும், மொழிகளையும் இணைத்துக் கனடாவிலிருந்து திரைப்படங்களைத் தயாரித்துவரும் இளைய தலைமுறை இயக்குனர் ட்றைடன் வீ. பாலசிங்கத்தின் இன்னுமொரு சீன மொழித் தயாரிப்பு “Not All Answers are Found in Google”.

14 நிமிடங்கள் 19 செக்கண்டுகளுக்கு ஓடும் இப்படம் பழைய கள்ளைப் புதிய மொந்தையில் வார்த்து தருகிறது. கொரோணா முடக்க காலத்தில் சும்மா கிடந்த காமராவுக்கும் வீட்டினுள் முடங்கிக் கிடந்த தாத்தாவுக்கும், பேத்திக்கும் வேலை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ட்றைடன் பாலசிங்கம். Post production வேலைகளுக்கு வேண்டுமானால் அவர் பணம் செலவழித்திருக்கலாம், மற்றும்படி ஒரு குறும் பட்ஜட்டில் தயாரித்திருக்கக்கூடிய குறும் படம்.

இரண்டு பாத்திரங்கள், may be இரண்டு locations, சில voice over கள்; அவ்வளவுடனும் படத்தை ஓட்டிவிட்டார். ஆனால் சொல்ல வந்த சேதி மிகவும் பலம் வாய்ந்தது. நிறைய tender moments.

புதிய தொழில்நுட்பங்களை வாழ்க்கையின் வழிகாட்டிகளாகக் கொண்டு வாழ முயற்சிக்கும் பேரன், பேத்தி பரம்பரையினருக்கு தாத்தா, பாட்டி மூலம் கொடுக்கப்படும் அறிவுரையைக் குறுகத் தறித்துக் குறும்படமாக்கியிருக்கிறார்கள் இயக்குனரும் (ட்றைடென் பாலசிங்கம்) காதாசிரியரும் (ஜோன் மகேந்திரன்). ஆனாலும் இதற்குள் இந்நுமொரு sub plot ஒன்றும் ஓடுகிறது. அதாவது “Life is about seeing the good things in the midst of bad”.

Li Jian Feng (Grandpa) and Evalynn Li (Sera) in “Not All Answers are Found in Google”

****

யப்பானியர் சீனாவை நிர்மூலமாக்கிவிட்டுப் போன காலத்தில் சிறைப்பிடித்த தன் நினைவுகளைப் பேத்தி சேராவுக்கு தாத்தா சொல்லும் கதையுடன் ஆரம்பமாகிறது படம். பூங்காவில் இருவரும் நடைபயிலும்போது சேரா தனது ஸ்மார்ட் ஃபோனில் பூவொன்றைப் படமெடுத்து தன் நினைவுகளைப் பதிவு செய்யும்போது தாத்தாவோ முன்னொருகாலத்தில் தன் புலன்களால் பதிவுசெய்தவற்றைத் தரவிறக்கம் செய்கிறார். படக்கதையின் முக்கிய plot இங்கேயே ஆரம்பமாகிவிடுகிறது என்பது படம் பார்ப்பவருக்கு இக்கணத்தில் புரிய வாய்ப்பில்லை என்பதுவே இயக்குனரின் கதை நகர்த்தும் கெட்டித்தனம். (சில தமிழ்ப் படங்களில் ஒருவர் கத்தியால் குத்தி ஒருவரைக் கொலை செய்யப்போகிறார் என்றால் இரண்டு மூன்று சீன்களுக்கு முன்னரேயே அக் கத்தியை கமரா குளோசப்பில் காட்டி ரசிகரின் மூளை களிமண் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டுவிடுவதுண்டு).

இது ஒரு சீன மொழிப்படம். ஆங்கிலத்தில் sub titles தாராளமாகக் கிடைக்கிறது. படத்தின் கதை, காட்சிகளால் நகர்த்தப்படாமல், வசனங்களால் நகர்த்தப்படுகிறது. கதை-வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் (dialogue-centric) படங்களுக்கு சப் டடைட்டில்கள் அதிகம் உதவுவதில்லை. (கருணாநிதியின் வசனங்களை முதன்மையாகக் கொண்ட படங்களுக்கு சப்-டைட்டில்கள் எப்படியிருக்கும் என யோசித்துப் பார்க்கலாம்).

நான் இப்படத்தை மூன்று தடவைகள் பார்த்தேன். முதலாவது தடவை சினிமாற்றோகிராஃபி, பாத்திரங்களின் நடிப்பு, பின்புலங்கள் போன்றவற்றுக்காக. இப்போது படத்தின் கதை எனக்கு விளங்கவோ அல்லது அதற்காக நான் முயற்சி எடுத்துக்கொள்ளவோ இல்லை. படத்தின் முடிவில் பல ஏமாற்றங்கள் தெரிந்தன. இருந்தாலும் இரண்டாவது தடவை sub-title மீது கவனம் செலுத்தினேன். இப்போது படத்தின் கதை புரிந்தது மட்டுமல்லாது காட்சிகளின் தேவையும் புரிந்தது. பூங்காவில் தாத்தாவும் பேத்தியும் நடந்துவரும் காட்சியும், பேத்தி பூவொன்றைப் படமெடுக்கும் காட்சியும் வெறும் அழகியல்நோக்கோடு தொடுக்கப்பட்டவை அல்ல என்பது கதையைப் புரிந்துகொண்டதன் பின்னரே புலப்பட்டது. மூன்றாவது தடவை பார்க்கும்போது பாத்திரங்களின் முக அசைவுகளையும் அவற்றைக் கமெரா பின்தொடரும் பாங்கையும் ரசித்தேன்.

sub-titles உடன் வருகின்ற எல்லாப் படங்களுக்கும் இந்த முப்பரிமாண mental processing பிரச்சினை உண்டு. காட்சி, பாத்திரங்களின் நடிப்புடன் கூடவே sub-titleகளை வாசித்து உடனுக்குடன் கதையை நுகர்வதற்கு சிலரால் முடியும். எல்லோராலும் முடியாது. அதற்கான time spacing இங்கு போதாது எna நிnaiக்கிறேன்.



*****

தாத்தாவும் பேத்தி சேராவும் மட்டுமே தனியே வீட்டில் இருக்கிறார்கள். திடீரென ஒரு தொலைபேசி வருகிறது. “அப்பா, விமான டிக்கெட் உறுதிசெய்யப்பட்டு விட்டது. மாலை 6 மணிக்கு ரொறோண்டோ விமான நிலையத்தில் விமானம் வந்திறங்குகிறது” என்கிறது அப்பெண்ணின் குரல். அடுத்த கணமே தாத்தா மகிழ்ச்சியோடு தனது பயணப் பெட்டியைத் தயார் செய்து முன் கதவுக்கு அருகில் கொண்டுவந்து வைத்து விடுகிறார். அவர் சீனாவுக்குத் திரும்பப் போகிறார் என்பதை sub title மூலம் அறியக்கூடியதாகவிருக்கிறது.

இந்த நேரத்தில், தான் ஏதோவொன்றை இழக்கப்போகிறேன் என்னும் சோகத்துடன் சேரா தாத்தாவின் முகத்தைப் பார்ப்பது பல tender moments களில் ஒன்று. ஆனாலும், ஏன் தாத்தாவுக்கு அவ்வளவு அவசரம் என்பது படம் பார்ப்பவருக்குப் புரியாத புதிர். மகள் வந்திறங்கும் அன்றே தாத்தா புறப்படுவது என்பது ஒரு அவசியமற்ற செருகல் எனவே நான் பார்க்கிறேன்; வேறு காரணங்கள் இருந்தால் அது புலப்படவில்லை. சீனாவிலுள்ள தாத்தாவின் கோழிப்பண்ணையில் குஞ்சுகள் பொரித்துவிடும் என்பது அவசரத்துக்கான காரணமாகப் படவில்லை. சீனாவுக்குத் திரும்பிப் போவத்ற்கான காரணங்கள் பல தாத்தாவின் மன்த்தில் குடைந்துகொண்டிருந்திருக்கலாம். அவரது கவலை தோய்ந்த முகம் அதைக் காட்டுகிறது. மணிக்கூட்டையும் பார்த்து, பயணப்பெட்டியையும் வாசலுக்குக் கொண்டுவருமளவுக்கு? ஏதோ missing. இயக்குநர் தான் சொல்ல வேண்டும்.

பின்னர் இன்னுமொரு தொலைபேசி அழைப்பு. “அப்பா, கொறோனாத் தொற்றுக் காரணமாக அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டு விட்டன. பயணம் ரத்தாகிவிட்டது” என்கிறது மகளது குரல். இவ்வுரையாடலை உற்றுக் கேட்ட சேரா, தாத்தாவைப் பார்த்துவிட்டு (another tender moment) ஓடிப்போய் பயணப் பெட்டியை உள்ளே இழுக்கிறார். தாத்தா சீனாவுக்கு இப்போதைக்குப் போகப் போவதில்லை என்பது அவளுக்குப் படு சந்தோஷம். அம்மாவை அவள் ஏன் miss பண்ணவில்லை என்பது தாத்தாவின் பாத்திரத்தை இலகுவாக நியாயப்படுத்துகிறது.

****

படத்தின் மூல நோக்கம் இனிமேல்தான் ஆரம்பமாகிறது. தாத்தா தனது ஸ்மார்ட் ஃபோனில் எதையோ பார்த்துவிட்டு மீண்டும் தன் பொக்கெட்டுக்குள் அதை வைக்க சேரா அதை எடுத்து ப் பார்க்கிறாள். “தாத்தா நீங்க இன்னும் பாட்டியை மறக்கவில்லைத் தானே” எனச் சேரா கேட்க அவர் தனது வாழ்க்கையின் nostalgic moments ஐப் பேத்திக்கு கூறுகிறார். ஒரு கேள்வியுடன் அவர் தனது உரையை ஆரம்பிக்கிறார். “சேரா பேபி, நீ பூங்காவில் எடுத்த படத்திலுள்ள பூவின் நிறமென்ன?”. குழந்தைக்கு அது ஞாபகத்தில் இல்லை. அது வெறும் கண்ணாடியினூடு சென்று உள்ளே பதிந்துகொண்ட ஒரு விடயம். மனித புலன்களால் அது பதியப்படவில்லை. வாழ்க்கை அப்படியல்ல. “Eyes are the windows to your heart” , “All I have to do is to close my eyes” என்ற அறிவுரையோடு தாத்தா பேத்தி உறவில் மாற்றம் ஏற்படுகிறது. தாத்தா தனது பாரம்பரியக் கலைகளையும், விளையாட்டுக்களையும், பொழுதுபோக்குகளையும் எடுத்துக்கூறி அவளோடு விளையாடி உலகைத் தரிசிக்க ஸ்மார்ட் ஃபோன்கள் போன்ற தொழில்நுட்பங்கள் தேவையில்லை என்பதை அக்குழந்தைக்கு எடுத்துக்கூறுகிறார். படம் ஆரம்பிக்கும்போது சேராவின் கையோடு ஒட்டியிருந்த ஸ்மார்ட் ஃபோன்,படம் முடியும்போது சோஃபாவில் அனாதரவாகக் கிடக்கிறது; அதுவே கிளைமாக்ஸ்.



தாத்தா சீனாவுக்குத் திரும்புகிறார். சேரா சிறிய பைனோகுலர் மூலம் அவர் செல்லும் விமானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவள் அழவில்லை, கதறவில்லை. தாத்தாவுக்கு அவள் எழுதிய சிறிய குறிப்பு / கவிதை பாடலாகப் பின்னணியில் ஒலிக்கிறது. அதன் வரிகள், குரல் இதயத்தைத் ஸ்தம்பிக்க வைக்கிறது.

கதை இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன். குழந்தை வளர்ப்பில் பாட்டன் பாட்டியின் பங்கு மிக முக்கியம் என்பது பல கலாச்சாரங்களில் காணப்படும் ஒன்று. கநடாவின் பூர்வகுடிகள் மத்தியில் இவ்விடயம் மிகவும் இறுக்கமாகப் பேணப்படுகிறது.

“Not All Answers are Found in Google” என்பதன் அர்த்தம் இப்போது புலப்படுகிறது. இது ஒரு philosophical படம், பொழுதுபோக்கு genre வுக்குள் வராது.

படத்தின் நல்லது கெட்டது என்று சொல்வதற்குச் சிலவுண்டு:

நிறைய tender moments. சேராவின் photogenic முகம் பல தருணங்களில் மனதை நிறுத்தி விடுகிறது. கமரா இன்னும் கொஞ்சம் அவளைப் பின்தொடர்ந்திருக்கலாம். தாத்தாவின் முகம் பல இறுக்கமான தசைகளைக் கொண்டிருந்திருக்க வேண்டும். மகிழ்ச்சியை நன்றாக வெளிப்படுத்துகிறார். கொடுத்ததை ஒழுங்காகச் செய்திருக்கிறார். வாழ்வில் எத்தனையோ சம்பவங்களைக் கண்ட, முகம் கொடுத்த பாத்திரம் என்ற சமாதானத்தோடு நகரலாம்.

யப்பானிய போரின் பின்னதான காலங்கள் பற்றிய தன் நினைவுகளைத் தாத்தா விபரிக்கையில் பின்னணியில் கொஞ்சம் துக்கமான இசை இழையோடியிருக்கலாமோ என எதிர்பார்த்தேன். இப்படிப் பல தருணங்கள் படத்தில் வந்தன. ஆனால் இயக்குநர் எல்லாவற்றையும் ஒன்றாக அள்ளிப்போட்டு இறுதிப் பாடல் மூலம் நிறைவுசெய்துவிட்டார்.

இசைத் தொகுப்பு / இணைப்பில் ஒரு விக்கல் துலாம்பரமாகத் தெரிகிறது. தாத்தா படியேறி மேலே போகும்போது படியோசையும் பாதவோசையும் sync பண்ணவேயில்லை.

குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட படம் என்றபடியால் படத் தொகுப்பில் கொஞ்சம் அவசரம் தெரிவதுபோலிருக்கிறது.

Preserve memories, not photographs என்ற வசநத்துடன் படம் முடிகிறது. அதுவேதான் படத்தின் கதை.

படத்தில் எந்தவொரு பாத்திரமும் மிகையாக நடிக்கவில்லை. தமிழில் எடுத்திருந்தால் அதுவேதான் படமாகவிருந்திருக்கும் என்று உங்களில் சிலர் நம்பினால் அதற்கு நானும் உடன்படுவேன்.

-மாயமான்