Entertainment

Never Have I Ever | ஒரு இந்திய – அமெரிக்க அனுபவம்

விமர்சனம்

அமெரிக்காவில் உயர்பள்ளி அனுபவம் என்பது ஒரு வகையில் நவரசங்களின் கலவை. கனடாவிலும் இதே கதை தான். விளையாட்டுத் திடல்களிலும், லொக்கர் கூடங்களிலும் கூட்டமாக மூப்படையும் ஆன்மாக்களின் திரட்சி எனவும் கூறலாம்.

மிண்டி கேலிங், மைத்திரேயி ராமகிருஷ்ணன்

Never Have I Ever , நெட்ஃபிளிக்ஸ் சின் திரைநாடகம் அமெரிக்கப் பள்ளி அனுபவத்தை முற்றிலும் ‘இந்திய’ ஒளிவட்டத்தால் காட்ட முனையும் ஒரு முயற்சி. The Mindy Project என்ற றோமாண்டிக் காமெடி திரை நாடகத்தைத் தயாரித்து, நடித்த மிண்டி கேலிங் என்ற இந்திய வம்சாவளிப் பெண் தயாரிக்கும் Never Have I Ever, அமெரிக்காவில் அதிகரிக்கும் இந்திய செல்வாக்கை இன்னுமொரு உயர் படியில் ஏற்றியிருக்கிறது. மிண்டியின் தந்தையார் ஒரு சென்னைத் தமிழர், தாயார் ஒரு வங்காளி. Never Have I Ever ஐ இப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கவேண்டிய தேவை உண்டு.

கதையே துயரத்தில் தான் ஆரம்பிக்கிறது. கதை மாது தேவி விஷ்வகுமாரின் (மைத்திரேயி ராமகிருஷ்ணன்) தந்தையார் மோஹன் (செந்தில் ராமமூர்த்தி) திடீர் மரணமடைவதோடு கதை ஆரம்பமாகிறது. இது நடைபெற்று சில நிமிடங்களில் தேவியின் கால்களும் பாவனையற்றுப் போகின்றன. தந்தையையும் இழந்து, கால்களின் பாவனையையும் இழந்து தேவி புதிய வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கிக்கொண்டபோது, இழந்தது போலவே மர்மமான முறையில் கால்களின் பாவனை மீளவும் கிடைக்கிறது. தேவி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப எடுக்கும் முயற்சியை நீண்ட நேரக்கோட்டில் பார்ப்பது தான் Never Have I Ever. இந்திய taboo subjects ஐ, அதிர்ச்சிக் கலவையால் மெருகூட்டி மேற்கத்தய ‘ஓ நோ’ ஓடியன்ஸுக்குப் படையலிடும் ஒரு வகை தீபா மேத்தா genre என Never Have I Ever unravel பண்ணுகிறது என்று உங்களை இன்னுமொரு உலகுக்கு மனம் இழுத்துச் செல்லுமானால், அது சரியான பாதையில் தான் செல்கிறது.

துயரத்துடன் ஆரம்பித்துச் சந்தோசத்தில் முடியும் தமிழ்ப்படங்களின் பாதிப்பு இல்லையென்றும் கூறிவிட முடியாது.

கால்களைத் திருப்பிப் பெற்றவுடன் மூண்டு வரும் தேவி இந்தத் தடவை இன்னுமொன்றையும் இழந்து விடுகிறாள். Unfortunately அது ‘நம்ம தமிழ் ரசிகர்களுக்கு’ கொஞ்சம் ‘இது’வாக இருக்கலாம். Yes, அவள் இந்தத் தடவை இழந்தது தனது கற்பை. பாடசாலையிலேயே hottest boy யாகப் பார்க்கப்படும் Hall-Yoshida (Darren Barnet) இந்தக் கசமுசவிற்குப் பொறுப்பாகிறார். என்றும் தன் முயற்சியில் தளராத விக்கிரமாதித்தன் பாணியில், தேவி returns to her normal life with a bang.

Darren Barnet
Darren Barnet

உயர்பள்ளி இளசுகளின் வயதுக்கு வரும் சேட்டைகளை இந்திய வடிவத்தில் காட்டும்போது, அதுவும் அமெரிக்க ஆடியென்ஸுக்கு, சமரசத்துக்கு இடமில்லை, period. ஆனால் மிண்டி இதில் ஒரு சாகசம் செய்கிறார். அதாவது நமக்குப் பரிச்சயமான அந்த துக்கத்தை (grief) (‘அத்தான்’ ஸ்டைல் அழுது குழறலின்றி) ஒரு பள்ளிக்கூடத்துக்குள்ளால் நகர்த்தி – அதுவும் கதையின் இயல்பான நகைச்சுவையோட்டத்தில் துண்டு விழாது – கொண்டுபோவது ஒரு சிறப்பான அம்சம். பாடசாலைகளில் ஆரம்பித்த காதல் , இரட்டைப் பின்னல், டெனிஸ் றக்கெட் இத்தியாதிகள் கடந்து சோகம் ஆரம்பிக்கும்போது வீட்டுக்குள் வந்துவிடுதல் என்றில்லாது அனைத்தையும் பள்ளிக்கூடத்துக்குள்ளேயே முடக்கி விடுகிறார் மிண்டி.மற்றய பாத்திரங்களும் இப்படியான collective traumas உள்ளால் போகிறார்கள். ஆனால் தேவி தனது சோகங்களினூடு மற்றவற்றையும் பார்ப்பது, அதன் மூலம் சந்திக்கும் இழப்புகள் ஆகியவற்றின் மொத்த அனுபவம் விரிக்கும் பாதையில் அவள் வாழ்வைத் தொடர்வது தான் plot ஆகவிருந்தால் இந்த Mindy Project ம் வெற்றி பெறும்.

ஒரு ‘இந்திய அமெரிக்க’ பாத்திரத்தை lead ஆகக்கொண்டு உருவாக்கப்பட்ட கதை அமெரிக்க ஆடியென்ஸுக்குத் திருப்பமாக இருப்பது ஒரு one season wonder ஆக இல்லாமல் மேலும் பல Mindy Projects ஆகப் பரிணமிக்குமானால் எல்லோருக்கும் வெற்றி.

மைதிரேயி ராமகிருஷ்ணன் ஒரு தமிழ்க் கனடியன் என்ற spin ஒன்றைப் போட்டு முகனூலில் அரைப்பதன் மூலம் நமது தமிழ்ச் சமூகம் collective pleasure ஐ எடுக்கலாம் ஆனால் அந்த tamilness அவளது பாய்ச்சலை நடையாக மாற்றிவிடக்கூடாது. உச்சிக்குப் போனபின் ஓங்கித் ‘தமிழென’ உரைப்பதுவே அவள் செய்யவேண்டியது.