LPL 2021 இறுதிப் போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் வெற்றியீட்டியது
2021ம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் சுற்றுப் போட்டிய்ன் இறுதி ஆட்டத்தில் காலி கிளாடியேற்ற்றர்ஸ் கழகத்தைத் தோற்கடித்ததன் மூலம் ஜாஃப்னா கிங்ஸ் கழகம் LPL 2021 வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் சென்றுள்ளது.
இன்று (23) கிரிக்கெட் பிரியர்களால் நிரம்பி வழ்ந்த்த அம்பாந்தோட்டை சூரியவேவா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலாவதாகத் துடுப்பெடுத்தாடிய ஜாஃப்னா கிங்ஸ் 3 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதில் அவிஷ்கா ஃபெர்ணாண்டோ 63 ஓட்டங்களையும் ரொம் கோளெர்-காட்மோர் 57 ஓட்டங்களையும் எடுத்திருந்தார்கள். கிங்ஸ் தரப்பில் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்சஷணா இச்சுற்றுப்போட்டி ஆட்டங்கள் அனைத்திலும் சிறப்பாகப் பந்துகளை வீசி வெற்றிக்குக் காரணமாக அமைந்தார்.
இதைத் தொடர்ந்து ஆடிய காலி கிளாடியேற்றர்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. தனுஷ்கா குணதிலகா 21 பந்துகளில் ஏழு பவுண்டரிகளையும், மூன்று சிக்சர்களையும் அடித்து 54 ஓட்டங்களைக் குவித்திருந்தாலும் கிளாடியேற்றர்ஸ் 23 ஓட்டங்களால் தோல்வியைத் த்ழுவிக்கொண்டது.
லங்கா பிரிமியர் லீக் போட்டிகள் ஆரம்பமானதிலிருந்து யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட இக் கழகம், தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் LPL சாம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. LPL- 2020 இல் முதல் தடவையாக வென்றபோது இக் கழகம் ‘ஜாஃப்னா ஸ்ராலியன்ஸ்’ என்ற பெயரில் விளையாடியிருந்தது.