Technology & Science

‘iPhone உரிமையாளர் இறந்தால்…? ‘தகவல் உயில்’ எழுத வழிசெய்கிறது அப்பிள்!

தொழில்நுட்பம்

நீங்கள் ஒரு அப்பிள் ஐ-ஃபோன் பாவனையாளரா? தற்செயலாக – த ற் செ ய லா க – உங்களுக்குத் திடீர் மரணம் ஏற்பட்டால் உங்கள் iphone இல் இருக்கும் தகவல்களை அறிவதற்கு நம்பிக்கையான ஒருவரை நீங்கள் வாழும்போதே நியமித்து விட வழி செய்கிறது ‘அப்பிள்’ நிறுவனம். திங்களன்று அப்பிள் நிறுவனம் அறிவித்த iOS 15.2 மென்பொருள் இதற்கான் வசதிகளைச் செய்து தருகிறது.

Digital Legacy என்ற பெயரில் இந்த ‘உயில்’ எழுதும் அம்சம் அப்பிள் அறிவித்திருக்கும் iOS 15.2 இயக்கு மென்பொருளில் (Operating System) இணைக்கப்பட்டிருக்கிறது. இதை எப்படி செயற்படுத்துவது என்பது பற்றிய விளக்கம் இங்கே தரப்படுத்துகிறது.



ஒருவருடைய இரகசிய கடவுச் சொல் அல்லது iCloud தகவல்களைத் தெரியாமல் அவருடைய ஃபோனில் இருக்கும் தகவல்களைக் குடும்ப உறவினர்களோ அல்லது நண்பர்களோ அறிய வேண்டுமானால் தற்போது அதற்கு நீதிமன்ற ஆணையை அவர் பெறவேண்டியுள்ளது. இதை இலகுவாக்குவதற்கு அப்பிள் நிறுவனம் இப் புதிய ‘உயில் எழுதும்’ அம்சத்தை இணைத்திருக்கிறது. இதன் மூலம் ஒருவர் தனது படங்களையோ அல்லது முக்கிய தகவல்களையோ iCloud சேமக்கலத்தில் சேமித்து வைத்திருந்தால் அவற்றை இந்த உயில் தரும் அனுமதியுடன் ஒருவர் மீளப்பெற்றுவிட முடியும். இதற்கு அவர்களுக்குத் தேவையானது மரணச் சாட்சிப் பத்திரமும் விசேட அனுமதி இலக்கமும் (special access key) தேவைப்படும்.

Digital Legacy அம்சத்தை உங்கள் iphone இல் இணைத்துக்கொள்ளும் படிமுறை:

  1. Settings > General > Software Update வழியாகச் சென்று iOS 15.2 இயக்கு மென்பொருளைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள்
  2. Settings இற்குச் செல்லுங்கள்
  3. இணைந்திருக்கும் பக்கத்தில் மேலே இருக்கும் உங்கள் பெயர் மீது அழுத்துஙகள்
  4. “Password & Security” என்பதைத் தேர்வு செய்யுங்கள்
  5. அடுத்ததாக “Legacy Contact” என்பதைத் தேர்வு செய்யுங்கள்
  6. உங்கள் உறவினர் / நண்பர்களில் 5 பேரைத் தரவிடுங்கள்
  7. சிஸ்டம் இப்போது உங்களுக்கு ஒரு ‘அனுமதிக்கான சொல்லைத்’ (access code) தரும். இதை நீங்கள் உங்கள் இதர உயில் போன்ற பத்திரங்களுடன் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
  8. எதிர்பாராத வகையில் உங்களுக்கு மரணம் சம்பவித்தால் இந்த ‘அனுமதிச் சொல்லையும்’ மரணச் சான்றிதழையும் கொண்டு உங்கள் ஃபோனிலுள்ள தகவல்களை அல்லது iCloud இல் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மீட்டெடுக்க முடியும். நண்பர்களோ அல்லது உறவினர்களோ இதற்கான அனுமதியை பின்வரும் அப்பிள் தொடர்பு மூலம் பெற்றுக்கொள்ளலாம்