Spread the love

பெப்ரவரி 5, 2020

ஐ.பி.எம். நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக (CEO) அரவிந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றலாகிப் போகும் ஜின்னி றொமெட்டியின் இடத்திற்கு கிருஷ்ணா நியமனம் பெற்றுள்ளார்.

ஐ.பி.எம். நிறுவனத்தை நவீனமயப்படுத்தி cloud தொழில்நுட்பத்திற்கு நகர்த்த றொமெட்டி முயன்றாராயினும் இதர நிறுவனங்களின் நகர்வுக்கு ஈடுகொடுக்க அவரால் முடியவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. அதனால் அவரது நிர்வாகத்தில் ஐ.பி.எம். மின் பங்கு விலைகள் 25% வீழ்ச்சியடைந்தன. அதே காலத்தில் மைக்கிறோசொஃப்ட் நிறுவனத்தின் பங்குகள் 500% த்தால் வளர்ச்சியடைந்தன.

கிருஷ்ணாவின் நியமனம் ஐ.பி.எம். நிறுவனத்தை cloud based வியாபாரத்தை நோக்கி மேலும் தள்ளுமென துறைசார் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.


ஐ.பி.எம். தற்போது hardware, software, cloud computing, A.I., data analysis போன்ற துறைகளில் தான் தனது வருமானத்தை ஈட்டி வருகிறது எனினும் அது தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துகொண்டே போகிறது. இதற்கு முன்னரும் இப்படியான வீழ்ச்சி ஏற்பட்டபோது நிர்வாகியாகவிருந்த லூ கெஸ்ட்னெர் நிறுவனத்தை hardware வியாபாரத்திலிருந்து service வியாபாரத்துக்கு மாற்றியதும் நிறுவனம் மீண்டும் வளர்ச்சியைக் கண்டது. இதே பாணியில் கிருஷ்ணாவும், cloud business இற்கு நிறுவனத்தை நகர்த்துவதன் மூலம் இழப்பை நிறுத்துவார் என முதலீட்டாளர் எதிர்பார்க்கின்றனர்.

Cloud computing என்று வரும்போது, பல நிறுவனங்கள் முந்திக்கொண்டு ஏற்கெனவே தமது இருப்பிடங்களை எடுத்துக்கொண்டுவிட்டன. அமசோன் நிறுவனம் விநியோகத் துறையில் தனது ஏகபோகத்தை நிச்சயப்படுத்திவிட்டது. மைக்கிறோசொஃப்ட் தயாரிப்புத் துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவிட்டது.

ஐ.பி.எம், தயாரிப்பு, சொஃப்ட்வெயர், ஹார்ட்வெயர், சேர்விஸ், கிளவுட் என்று சகல துறைகளிலும் கால்வைததபடியால்தான் இழப்பைச் சந்திக்க நேரிட்டது என்கிறார்கள் வணிக ஆய்வாளர். கிருஷ்ணா தனியே கிளவுட் சேர்விஸ் துறையில் மட்டும் தனது கவனத்தைச் செலுத்தவேண்டுமென அவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

Print Friendly, PDF & Email
Related:  பலர் அடமானக் கடன்களை மீளச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளலாம் - கனடிய மத்திய வங்கி ஆளுநர்.