Canadian Tamil Congress

Canadian Tamil Congress

இளம் கிரிக்கெட் வீரர் ரிஷியுதனுக்கு கனடிய தமிழ் காங்கிரஸ் ஆதரவு

கொழும்பு இந்துக் கல்லூரியின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான 10 வயது ரிஷியுதனின் குறிப்பிடத்தக்க திறமைக்கு கனடிய தமிழ் காங்கிரஸ் (CTC) தமது ஆதரவை வழங்குவதாக அறிவிதுள்ளது . சமீபத்தில் நடந்த பாடசாலை மட்டத்திலான கிரிக்கெட் போட்டியில், ரிஷியுதன் 9.4 ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டம் கூட விட்டுக்கொடுக்காமல் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் . இந்த சாதனையை பாராட்டுவதற்காக , கனடிய தமிழ் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் தற்போதைய ஆலோசகருமான ராஜ் தவரட்ணசிங்கம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி ரிஷியுதனின் இல்லத்திற்குச் நேரில் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், கிரிக்கெட் மீதான அவரது ஆர்வத்திற்கு கனடிய தமிழ் காங்கிரஸ் உதவி செய்யும் எனவும் தெரிவித்தார் இதன் போது ரிஷியுதனின் குடும்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கனடிய தமிழ் காங்கிரஸ் ,குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு அத்தியாவசியமான முச்சக்கர வண்டியின் குத்தகையை முழுமையாக செலுத்தியது, இது அவர்களின் நிதிச் சுமைகளைத் குறைப்பதுடன் , ரிஷியுதனின் கிரிக்கெட் கனவுகளை அடைவதற்கு ஆதரவான சூழலை ஏற்படுத்தும்19வது வயதில் இலங்கை தேசிய அணிக்காக விளையாடும் ரிஷியுதனின் கனவிற்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என ராஜ் தவரட்ணசிங்கம் ரிஷியுதனின் பெற்றோரிடம் உறுதியளித்தார். கனேடிய தமிழ் காங்கிரஸ், தமிழ் சமூகத்தில் உள்ள திறமைகளை வளர்ப்பதில் அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது மற்றும் கலாச்சார பெருமை மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதில் விளையாட்டுகளின் முக்கிய பங்கை ஒப்புக்கொள்கிறது. ரிஷியுதன் போன்ற இளம் திறமையாளர்களின் கனவுகளை வளர்ப்பதில் அதன் அர்ப்பணிப்பை வலியுறுத்தி, கனடாவில் உள்ள தமிழ் சமூகத்தின் தொடர்ச்சியான ஆதரவிற்காக எமது அமைப்பு நன்றி தெரிவிக்கிறது. Video: https://www.youtube.com/watch?v=vEehnYa4zNY&ab_channel=ctctamil

Read More
Art & LiteratureCanadian Tamil Congress

ரொறோண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை: ஆரம்ப துறைத் தலைவராக பேராசிரியர் சித்தார்த்தன் மெளனகுரு நியமனம்!

ரொறோண்டோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தமிழ்த் துறையின் ஆரம்பத் தலைவராக பேராசிரியர் சித்தார்த்தன் மெளனகுரு அவர்கள் நியமனம் பெற்றுள்ளார். அவர் தனது பதவியை மே 2024

Read More
Canadian Tamil CongressNewsUS & Canada

முதற் தடவையாக கனடியத் தமிழர் பேரவையின், உணவு வங்கிக்கான தமிழ் மரபுரிமைத் திங்கள் காலப் பங்களிப்பு

தொடரும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் காரணமாக, மக்களுக்குச் சேவை செய்வதில் உணவு வங்கிகள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான சங்கடங்களை உணர்ந்து கனடியத் தமிழர் பேரவை (CTC),2022 ஆம் ஆண்டில் தனது முதற் தமிழ் மரபுரிமைத் திங்கள் உணவு இயக்கத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.இந்த ஆண்டு உணவு இயக்கத்திற்கான பயனாளியாக யோர்க் பிராந்தியத்தின் உணவு வங்கியைக் கனடித் தமிழர் பேரவை தேர்ந்தெடுத்திருந்தது. இந்த உணவு வங்கி, யோர்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள பல நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட குடும்பங்களுக்கு உணவுச் சேவையை வழங்கி வருகிறது. மிகக் கடுமையான குளிர் காலநிலை இருந்தபோதிலும், ஜனவரி மாத நாட்களில், தமிழ் மரபுரிமைத் திங்கள் உணவு இயக்கம் 7,564 கனடிய டொலர்களை சேகரித்திருந்தது. இந்த நிதியில் பணம், உணவுப் பொருட்கள் ஆகியவை உள்ளடங்கியிருந்தன. வெள்ளிக்கிழமை ஜனவரி 28,2022 அன்று, கனடியத் தமிழர் பேரவையின், தமிழ் மரபுரிமைத் திங்கள் உணவு இயக்க உறுப்பினர்கள் திரட்டப்பட்ட நிதியையும், உணவுப் பொருட்களையும் நோர்க் பிராந்தியத்தின் உணவு வங்கியின் நிறைவேற்றுச் செயலர் அலெக்ஸ் பிலோட்டாவிடம் ஒப்படைத்தனர். கனடியத் தமிழர் பேரவையின் துணைத் தலைவர் ரவீனா ராஜசிங்கம் இந்த உணவு இயக்கத்துக்கு ஆதரவளித்த நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தார். மற்றும் இந்த முயற்சியில் பங்கெடுத்த கனடிய பல்லினக் கலாச்சார அவைக்கும், ஒன்ராறியோவுக்கான ஆசியர்கள் அமைப்புக்கும் ரவீனா மேலதிக சிறப்பு நன்றிகளைத் தெரிவித்தார்.

Read More
Canadian Tamil CongressNewsUS & Canada

முதலாவது ரொறொன்ரொ – யாழ் தமிழ் மரபுரிமைத் திங்கள் நிகழ்வு

கனடியத் தமிழர் பேரவை, ரொறொன்ரோ மாநகர சபைக்கும் – யாழ் மாநகர சபைக்கும் இடையில் புரிந்துணர்வு நட்பு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட வேலைத் திட்டங்களை முன்னெடுத்திருந்தது. இதன்

Read More