இலங்கை தண்டிக்கப்படாதவரை பின்னடைவையே சந்திக்கும் – உலகத் தமிழர் பேரவை
ஊடக அறிக்கை செப். 14, 2023 – இலண்டன் செப்டம்பர் 06, 2023 அன்று பிரித்தானிய சனல் – 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட விவரணப் படம் 2019
Read More
ஊடக அறிக்கை செப். 14, 2023 – இலண்டன் செப்டம்பர் 06, 2023 அன்று பிரித்தானிய சனல் – 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட விவரணப் படம் 2019
Read Moreமொத்தம் 5367 மாணவர்களைப் பராமரிக்கிறது இலங்கையில் தொடரும் அரசியல் , பொருளாதாரச் சீரழிவுகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். கடந்த 70 வருட காலத்தில் இப்போதுதான்
Read MoreMeet the global Tamil entrepreneurs and professionals Canadian Tamil Congress (CTC) is happy to promote The RISE Emerge London Summit from
Read Moreதொடரும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் காரணமாக, மக்களுக்குச் சேவை செய்வதில் உணவு வங்கிகள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான சங்கடங்களை உணர்ந்து கனடியத் தமிழர் பேரவை (CTC),2022 ஆம் ஆண்டில் தனது முதற் தமிழ் மரபுரிமைத் திங்கள் உணவு இயக்கத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.இந்த ஆண்டு உணவு இயக்கத்திற்கான பயனாளியாக யோர்க் பிராந்தியத்தின் உணவு வங்கியைக் கனடித் தமிழர் பேரவை தேர்ந்தெடுத்திருந்தது. இந்த உணவு வங்கி, யோர்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள பல நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட குடும்பங்களுக்கு உணவுச் சேவையை வழங்கி வருகிறது. மிகக் கடுமையான குளிர் காலநிலை இருந்தபோதிலும், ஜனவரி மாத நாட்களில், தமிழ் மரபுரிமைத் திங்கள் உணவு இயக்கம் 7,564 கனடிய டொலர்களை சேகரித்திருந்தது. இந்த நிதியில் பணம், உணவுப் பொருட்கள் ஆகியவை உள்ளடங்கியிருந்தன. வெள்ளிக்கிழமை ஜனவரி 28,2022 அன்று, கனடியத் தமிழர் பேரவையின், தமிழ் மரபுரிமைத் திங்கள் உணவு இயக்க உறுப்பினர்கள் திரட்டப்பட்ட நிதியையும், உணவுப் பொருட்களையும் நோர்க் பிராந்தியத்தின் உணவு வங்கியின் நிறைவேற்றுச் செயலர் அலெக்ஸ் பிலோட்டாவிடம் ஒப்படைத்தனர். கனடியத் தமிழர் பேரவையின் துணைத் தலைவர் ரவீனா ராஜசிங்கம் இந்த உணவு இயக்கத்துக்கு ஆதரவளித்த நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தார். மற்றும் இந்த முயற்சியில் பங்கெடுத்த கனடிய பல்லினக் கலாச்சார அவைக்கும், ஒன்ராறியோவுக்கான ஆசியர்கள் அமைப்புக்கும் ரவீனா மேலதிக சிறப்பு நன்றிகளைத் தெரிவித்தார்.
Read Moreகனடா பிராம்டன் நகரில் அமையவிருக்கும் தமிழின அழிப்பு நினைவுத்தூபி கட்டுமானத்திற்கு ஆதரவு தேடும்நிகழ்வாக இவ்வருட பொங்கல் நிகழ்வு சிறப்புற நடத்து முடிந்தது. ஜனவரி மாதம் 22ந் திகதி நடந்த இந்தப்பொங்கல் விழா 2022 கொரோனா பரவல் அச்சுறுத்தல் பாதுகாப்புக் காரணமாக இணையம் வழியாக மெய்நிகர் நிகழ்வாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களைக் கவரும் வண்ணம் மாறுபட்ட வகையில் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டிருந்தது. தமிழினத்தின் மாண்பினை வெளிக்காட்டும் வகையிலமைந்திருந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இம்முறையும் தமிழ்த் தேசிய எழுச்சி நடனங்களாகவும் , பாடல்களுமாக பொங்கல் விழாவினை சிறப்பித்திருந்தன. தமிழ்ப்பாரம்பரியத்தை போற்றி வரும் முன்னணி கலைஞர்களும் மற்றும் நடன இசைப் பள்ளி மாணவர்களும்இவ்வாண்டும் இந்தப் பொங்கல் நிகழ்வினில் கலந்து கொண்டனர். குறிப்பாக இளம் கலைஞர்கள் தமதுகலைத் திறமையினால் தமிழ்ப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக தம்மை வெளிக்காட்டி பார்வையாளர்களைப்பிரமிக்க வைத்தனர். கலை நிகழ்ச்சிகளோடு சமாந்தரமாக நடப்பட்ட நிதிசேர் நிகழ்வு பிராம்டன் நகரில் அமையவிருக்கும் தமிழினஅழிப்பு நினைவுத்தூபி குறித்த கவனத்தை உலகளாவிய நிலையில் பரவிட வழி செய்தது. நிகழ்வின்பார்வையாளர்களாக கலந்து கொண்ட பலரும் இந்த நினைவுத்தூபி அமைவதற்கான பங்காளர்களாகமாறியமையும் இங்கு சிறப்புறக் குறிப்பிடத் தக்கது. பார்வையாளர்கள் மின்னணுமுறையில் e-transfer வழியாக தம்மாலான நிதியுதவிகளை தொடர்ந்து வழங்கியவாறு இருந்தனர். தவறவிட்டவர்கள் பின்வரும் இணைப்பைஅழுத்தி அமைக்கப்படும் தமிழின அழிப்பு நினைவுத்தூபியில் பங்குதாராலாகலாம். இதற்குப் பங்களிக்க விரும்புபவர்கள் பின்வரும் தொடுப்பை அழுத்தவும் நினைவுத்தூபி அமைவதற்காக உத்தியோகபூர்வமாக நடத்தப்பட்ட முதலாவது நிதிசேர் நிகழ்வு இது. கனடாவிலும் மேலும் உலகளாவிய நிலையில் இயங்கும் பல்வேறு தமிழ் அமைப்புக்களும் நினைவுத்தூபி அமைந்திட தமது ஆதரவினை வெளிப்படையக அறிவித்து ஆதரவளித்து தமிழனத்தின் ஒற்றுமையை வெளிக்காட்டினர். இந்த ஒற்றுமையும், நினைவுத்தூபி அமைந்திட நாம் காட்டும் வேகமும், கனடாவின் ஏனையஇனங்களுக்கு ஒரு மாபெரும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இவற்றிற்கெல்லாம் மேலும் சிறப்புத் தருவதுபோல கனடிய மத்திய அரசு, மாகாண அரசு, உள்ளூராட்சிமன்றங்கள் ஆகிய மூன்று நிலையிலும் அஙகம் வகிக்கும் பல்வேறு அரசியல்வாதிகளும் இந் நிகழ்வில் கட்சிபேதமின்றி கலந்து கொண்டதுடன் தமிழின அழிப்பு குறித்த தமது ஆதரவு நிலைப்பாட்டினை உறுதி செய்தனர். நினைவுத்தூபி அமைப்புக் குழுவினருக்கு பக்கபலமாக தாமும் இருப்பதை வெளிப்படையாக அறிவித்திருப்பதும்இப்பொங்கல் விழாவின் சிறப்பம்சங்களில் ஒன்றாகவும், பேசுபொருளாகவும் தற்போது மாறியிருக்கிறது. சுமார் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, பல்வேறு முன்னணித்தொலைக்காட்சிகள் ஊடாகவும் உலகளாவிய நிலையில் தொடர்ச்சியாகஒளிபரப்பப்பட்டிருந்தது. விழா
Read More