Happy Thanksgiving Day! – எல்லோருக்கும் நன்றி!
தலையங்கம்
கனடாவில் இன்று நன்றி நவிலல் நாள். ஒரு விடுமுறை நாள். தமிழரது பொங்கல் திருநாளைப் போல…
உலகின் அனைத்து உயிரினங்களினதும் துயர் துடைக்கவென்று புறப்பட்ட அனைவரும் இந்நாளில் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். மரத்துக்கு நீரூற்றியவரும், மாட்டுக்கு உணவூட்டியவரும், மனிதருக்கு மகிழ்ச்சியூட்டியவரும் தலைவணங்கப்படவேண்டியவர்கள்.
கொறோணாத் தொற்றுக் காரணமாக இயற்கை இலவசமாகத் தந்த உயிர் வாயுவைச் சுவாசிக்க முடியாமல் தவித்த மில்லியன் கணக்கான மக்களைக் காப்பாற்ற இறுதிவரை போராடிய மருத்துவர்கள், தாதிகள், இதர சுகாதாரப் பணியாளர்கள், தெய்வத்துக்குச் சமமாகப் போற்றப்பட வேண்டியவர்கள்.
வருடத்தில் ஒருநாளை இத் தேவதைகளுக்காக அர்ப்பணிப்ப்ணிக்கவென யாரோ ஒருவரின் மனதில் இவ்வெண்ணக்கரு தோன்றியிருக்கும். அந்தப் புண்ணியவானுக்கோ புண்ணியவதிக்கோ இன்றய நாள் அர்ப்பணம்.
மேற்கு நாடுகளில் Thanks Giving என்றதும் முதலில் ஓடி ஒளிவது வான் கோழிகள். இந்நாளுக்காக மில்லியன் கணக்கில் அவை கொலைக்களமேறப்போகின்றன. அது கொஞ்சம் பாரமாகத்தான் இருக்கிறது.
‘மறுமொழியை’ வாசித்து அவ்வப்போ ‘லைக்’ போடும், கருத்துரைக்கும் மனங்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்.
-ஆசிரியர்