Flight 752 | சுட்டு வீழ்த்தியது ஈரான் - தற்செயலான நிகழ்வென அது ஒத்துக்கொண்டது ! -

Flight 752 | சுட்டு வீழ்த்தியது ஈரான் – தற்செயலான நிகழ்வென அது ஒத்துக்கொண்டது !

Spread the love

ஜனவரி 11, 2020

விமானம் வீழ்ந்த இடம் – படம்: அஸோஸியேட்டட் பிரஸ்

யுக்கிரேயினின் விமானம் Flight 752 ஐ ஈரானிய இராணுவம் தற்செயலாக சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சி தனது செய்தியில் தெரிவித்துள்ளது. அத்துடன், ஈரானிய வெளிவிவகார மந்திரி ஜவாட் சாரிஃப் தனது டுவிட்டர் செய்தி மூலமும் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

“ஒரு துன்பகரமான நாள். அமெரிக்க சாகசத்தின் விளைவாக எழுந்த சிக்கலைச் சமாளிக்க ஈரானிய ஆயுதப்படைகள் எடுத்த முயற்சி தவறுதலாகப் பிரயோகிக்கப்பட்டுவிட்டது. “எங்கள் மக்களுக்கும், இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் புடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபம்” என அந்த டுவீட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் வீழ்ந்த இடம் – படம்: அஸோஸியேட்டட் பிரஸ்

வெள்ளி காலை வரை, ஈரானுக்கும் இச் சம்பவத்துக்கும் தொடர்பில்லையெனவும் அது இயந்திரக் கோளாறு காரணமாக நடைபெற்றதெனவும், கடுமையாக மறுப்புத் தெரிவித்து வந்தது.

இச் சம்பவத்தின்போது கனடாவிற்குப் பயணம் செய்த 138 பேர் உட்பட, 176 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஈரான் , யூகிக்கிரெயின், சுவீடன், பிரித்தானியா, ஆப்கானிஸ்தான், ஜேர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.

வெள்ளி காலை நடைபெற்ற ஊடக மாநாட்டில் ஈரானிய தேசிய விமானத்துறையின் தலைவர் அலி அபேட்சாடே, “எங்களுக்குத் தெரிந்தவரை எம்மால் உறுதியாகச் சொல்லக்கூடியது – விமானத்தை எந்த ஏவுகணையும் சுட்டு வீழ்த்தவில்லை என்பதே. அமெரிக்காவும், கனடாவும் அதை உறுதியாக நம்பினால் அதற்குறியா ஆதாரங்களை வெளியிடட்டும்” எனகே கூறியிருந்தார்.

விமானத்தை ஏவுகணை சுட்டு வீழ்த்தியது என்பதற்கான ஆதாரங்கள் மேற்குநாடுகள் வசமிருந்தும் அவற்றின் மூலத்தின் இரகசியம் காப்பாற்றப்பட வேண்டுமென்பதற்காக அவர்கள் அவற்றைப் பகிரங்கப் படுத்தவில்லை எனவும் ஆனால் அவற்றைப் பார்க்காத தமக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டதென்றும் அசோஸியேட்டட் பிரெஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தின் பயணத்தின் இறுதிக் கணங்களைத் தம்மால் பார்க்க முடிந்தது என அது தெரிவித்துள்ளது.

யுக்கிரேயின், கனடா, பிரான்ஸ், இவ் விமானத்தைத் தயாரித்த போயிங் நிறுவனம் ஆகியவற்றை விபத்து பற்றிய விசாரணைகளில் பங்கேற்குமாறு ஈரான் அழைத்திருந்தது. கனடாவின் போக்குவரத்துப் பாதுகாப்புச் சபையைச் சேர்ந்த இருவர் ஈரானுக்குப் போவதற்குத் தயாராகவிருந்தனர்.

விபத்து பற்றிய விசாரணைகள் குறித்து ஈரான் பல விமர்சனங்களை எதிர்நோக்குகிறது. அவற்றிலொன்று, விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து தடயங்களை அகற்றியது தொடர்பானது.

கனடாவிலிருந்து இருவருக்கு மட்டுமே நுழைவு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தாலும், அது தனது குழுவொன்றை ஏற்கெனவே துருக்கிக்கு அனுப்பியுள்ளது. கனடாவுக்கு ஈரானுக்கும் ராஜதந்திரத் தொடர்புகள் கடந்த சில வருடங்களாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.

அதே வேளை, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் ‘கறுப்புப் பெட்டியைத்’ தாம் கண்டுபிடித்துவிட்டதாகவும், விசாரணைகள் நிறைவுபெறுவதற்கு ஒரு வருடகாலம் பிடிக்கலாம் எனவும், ஈரானின் விசாரணைக் குழுவின் தலைவர் ஹசான் ரேசாஇபார் தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பெட்டியும், வீணாகி கட்டுபாட்டுக் கோபுரத்துடன் விமானி மேற்கொண்ட உரையாடல்களைக் கொண்ட தரவுகளையும் யுக்கிரேனிய விசாரணைக்குழு தம்மிடம் எடுத்துச் சென்றுள்ளது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *