Fact Check | சொலைமானி படுகொலை – உலகவலம் வரும் பொய்யான காணொளி!

Spread the love

ஜனவரி 7, 2020

ஈரானின் முக்கிய இராணுவத் தளபதிகளில் ஒருவரான காசிம் சொலைமானி கொல்லப்பட்டபோது அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்டதெனக்கூறி ஒரு எச்சரிக்கையுடன் கூடிய ட்றோண் தாக்குதல் பற்றிய காணொளி ஊடகங்களில் வலம் வருகிறது. இக் காணொளி உண்மையில் ஒரு வீடியோ விளையாட்டின் ஒரு துண்டென்றும் நிஜமாக அதில் காடடப்பட்டது போலத் தாக்குதல் இடம்பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

‘ சொலைமானி மீது அமெரிக்க ட்றோண் தாக்குதல் ‘ என்ற தலைப்பில் முகநூலில் பதிவேற்றப்பட்ட இக் காணொளி யை உண்மையில், விஷான் பிரகாஷ் என்பவர் பதிவேற்றியதாக என ‘இந்தியா டுடே’ சஞ்சிகை கண்டுபிடித்திருக்கிறது. இதுபற்றிய தொடுப்பொன்று யூ டியூப்பில் இருக்கிறது.

காணொளி

சொலைமானியின் மீதான தாக்குதலின் போது மூன்று ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் அதன் போது சொலைமானி உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும் அறியப்படுகிறது.

முகநூல் தற்போது இக்காணொளி பற்றிய பதிவுகளை அகற்றியிருக்கிறதென்றாலும், டுவிட்டர் பாவனையாளர்களும் இணையத்தளங்களும் இப் பொய்யான காணொளியைப் பகிர்ந்துவருகிறார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>