CES 2020 | Consumer Electronics உற்சவம்

Spread the love
Tam Sivathasan B.Eng

மைக்கிறோ எல்.ஈ.டி, 8K தொலைக்காட்சிகள் (Micro LED, 8K TV’s)
SONY VISION S at the CES 2020

தமிழ்நாட்டில் மார்கழி உற்சவம், யாழ்ப்பாணத்தில் நல்லூர் திருவிழா, மட்டக்களப்பில் மாமான்கேஸ்வர் திருவிழா போன்று ‘ரெக்கீஸ்’ (techies) எனச் செல்லமாக அழைக்கப்படும் தொழில்நுட்பவியலாளப் பக்த கோடிகள் படையெடுக்கும் ஒரு வருடாந்த உற்சவம் கலிபோர்ணியாவில் தை மாதத்தில் நடக்கிறது. வருகிற வருடமோ அல்லது அடுத்த வருடமோ உங்கள் கைகளில் தவழப்போகும் அந்த எலெக்ட்றோணிக் gadget இங்கு தவழ்ந்து எழும்புவது வழக்கம்.

Trade shows என அழைக்கப்படும் இப்படியான வர்த்தகக் கண்காட்சிகள் மேற்குநாடுகளில் நடைபெறும் வருடாந்த திருவிழாக்கள் தான். எங்களூர் திருவிழாக்களில் வெளி வீதிகளில் வைத்திருக்கும் காப்புக் கடைகளில் ‘ புதிய நவநாகரீக வருகைகள்’ அடுக்கப்பட்டிருப்பது நாம் கண்ட கனாக் காலக் காட்சிகள்.

இதுபோலவே உலகில் புதிதாக அறிமுகமாகும் கருவிகள் முதன் முதலாக இங்குதான் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இங்கு தொழில்நுட்ப பக்தகோடிகள் திரள்வதைப் போலவே வர்த்தகர்களும் வருவார்கள். ஆர்வம் மிக்க இளசுகள் காட்சிக்கு வைத்திருக்கும் மிகச் சிறந்த idea க்களைப் பெரிய சுறாக்கள் விழுங்கும் idea க்களும் இங்குதான் உருவாகின்றன.

CES (Consumer Electronic Show), Consumer Electronic Association ஆல் வருடா வருடம், நெவாடா, கலிபோர்ணியாவில் தை மாதத்தில் (பெரும்பாலும் நான்கு நாட்கள்) நடைபெறுகிறது. 180,000 முதல் 200,000 பேர் கலந்துகொள்ளும் இவ்வுற்சவம் பிரமாண்டமான மண்டபத்தில் நடைபெறுகிறது.


உலகின் பிரபலமான பல நிறுவனங்கள், ஒரு prestige இற்காகவாது தங்கள் பிரசன்னத்தை இங்கு வைத்துக் கொள்ள விரும்புமளவுக்கு இந்த உற்சவம் பிரபலமானது. இதன் 53 ஆவது காட்சி, 2020 ஆம் ஆண்டு, தை மாதம் 7 முதல் 10 வரை நடைபெற்றது.

இந்த வருடம் 4,400 நிறுவனங்கள், பெரிசும் சிறிசுமாக, இங்கு தங்கள் எண்ணங்களையும் (concepts), ஆரம்பத் தயாரிப்புக்களையும் (prototypes) காட்சிப்படுத்தியிருந்தார்கள். இந்த எண்ணங்களும், தயாரிப்புக்களும் வெகுவாகப் பரிசோதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு ஆபத்துக்கள் எதுவுமில்லை என நிரூபித்த பின்னர் அரச அங்கீகாரத்துடன் சந்தைப்படுத்தப்படுவது வழக்கம். இதற்கு ஓரிரு வருடங்கள் பிடிக்கும்.

இந்த வருடம் Detroit Auto Show இல் இருக்கவேண்டிய பல வாகனங்கள் இங்கே காட்சிப்படுத்தப்படிருந்தன. எல்லாம் மின்சாரக் கார்கள். பாவம் Detroit.

Mercedes AVTR Vision

மெர்சேடிஸ் பென்ஸ் தனது Vision AVTR (Advanced Vehicle Transformation) வாகனத்தைக் காட்சிப்படுத்தியிருந்தது. ‘Avatar’ படத்தில் வரும் வாகனத்தைப் பின்பற்றி மெர்சேடிஸ் நிறுவனம் இதை வடிவமைத்திருக்கிறது. வாகனத்தின் வேகத்தை அதிகரிக்கும் அதே வேளை எரிபொருட் பாவனையைக் குறைப்பதற்கான aerodynamic design. நமது இளசுகள் ஓடித்திரியும் வாகனங்களில் உள்ள spoiler எப்படி சுழல் காற்றைத் தவிர்த்து வாகனத்தின் பின்னிழுப்பைத் (drag) தவிர்க்கிறதோ அதே போன்று இந்த மெர்சேடிஸ் காரில் தானியக்கத்தில் இயங்கும் 33 இறக்கைகள் (multi-functional flaps) தமக்குள் ஒருமைப்பாட்டுடன் இயங்கும் வகையில் இதன் வடிவமைப்பு இருக்கிறது. எங்கோ ஒரு பணக்கார சுல்தானோ அல்லது அரேபிய ஷேய்க்கோ மெர்சேடிஸ் CEO வின் மின்சாரக் கனவாக இருந்திருக்கலாம்.

Related:  கோவிட்-19 | முன்னறிவித்தல் தரும் ஸ்மார்ட் எலெக்ட்றோணிக்ஸ்


SONY VISION S

SONY யும் தனது பங்கிற்கு மின்சார வாகனத்திற்குள் நுழைகிறது. இது சந்தைக்கு வருவதற்கு இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கலாம். இந்த வருட உற்சவப் பிரியர்களை மிகவும் கவர்ந்த காட்சிப் பொருளாக SONY VISION S இருந்தது.

வழக்கமான middle dash போல பக்கத்தில் இருக்கும் பயணிக்கு முன்னாலும் ஒரு dash இருக்கிறது. இரண்டுமே touch screen வகையைச் சேர்ந்தவை. இரண்டு பேருமே வாகனத்தின் சில கட்டுப்பாடுகளை இயக்கலாம். Wife-Hi control இற்காகவும் இருக்கலாம் (?). இன்னுமொரு ஆச்சரியம், இவ் வாகனத்தில் SONY licenced music, games, movies மட்டுமே play பண்ண முடியும். ம்.ம். Copy cats out!8K Products

தொலைக் காட்சிகள் என்று வரும்போது பல புதிய வருகைகள், பழசுகளுக்கு சோடித்தோ என்னவோ, காட்சிக்கு வருகின்றன. எல்லாமே துல்லியத்தை (resolution) அடிபடையாகக் கொண்டு முன்னேறுவையாகத் தென்படுகின்றன. இதில் 8K என ஒன்று இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே உற்சவத்தில் அறிமுகமாகியிருந்தது. அது இந்த வருடம்தான் முழுமையான தயாரிப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டது. ஒரு திரையில் எவ்வளவு அதிகமான ஒளிப்புள்ளிகளைக் (pixels) கொண்டு ஒரு ஒளிச் சித்திரத்தை வரையமுடியுமோ அவ்வளவுக்கு அது துல்லியமாக இருக்கும். தொலைக் காட்சி (T.V.) திரை, பொதுவாக நீளம் x அகலம் பரிமாணத்தில் குறிப்பிடப்படுகிறது. 4K T.V. யில் 3840 x 2160 புள்ளிகள் மூலம் உங்கள் அபிமான நடசத்திரம் துலங்குவார். அதே வேளை 8K T.V. யில் 7860 x 4320 புள்ளிகளில் அவர் மின்னுவார். தெருவோரங்களில் காணப்படும் பெரிய திரைகள் இனி 8K தொழில்நுட்பத்தில் இருக்கும். இத் துலியத்தின் அலகை dpi எனவும் குறிப்பிடுவார்கள்.

தொலைக்காட்சித் திரைகளின் பரிணாம வளர்ச்சியில் tube இல் தொடங்கிப் பின்னர், Plasma, LCD, LED, HD LED, OLED, Mini LED என்று இப்போது Micro LED என வந்து நிற்கிறது. அதாவது நான் மேலே சொன்ன ஒளிப்புள்ளிகளை எப்படி உருவாக்குவது என்பதுவே இந்த வகைகள். அதைப் பற்றி இன்னுமொரு தடவை பார்க்கலாம்.

Samsung’s Micro LED tech sees each pixel composed of microscopic red, green and blue LEDs

இந்த வருட உற்சவத்தில் Samsung, LG, SONY போன்ற பிரபலங்கள் தமது தினவுகளைக் காட்டியிருந்தன. அவற்றில் MIcro LED, 8K, Rotating Lifestyle T.V. எனப்பல வடிவங்கள் இருந்தன. 8K திரைகள் பொதுவாக ‘The Wall’ என்ற பெயரில் கடந்த சில வருடங்களாக அறிவிக்கப்பட்டு வந்தன. காரணம் அவை தெருவோரங்கள், கோபுரங்கள், மண்டப நுழைவாயில்கள் போன்றவற்றில் நிறுவப்படுவதற்காக விரும்பிய அளவுகளில் (custom size) இற்குச் செய்துகொடுக்கப்பட்டன. இந்த வருடம் Samsung வீடுகளில் வைக்கக்கூடிய 75, 88, 93 அங்குலத் திரைகளில் Micro LED திரைகளைச் செய்திருந்தது.

இதைவிட Samsung இன் 8K QLED (uses Quantum processor) திரையைக் காட்சிக்கு வைத்திருந்தது. இதே தொழில்நுட்பத்தில் இந்தியாவில் திரையரங்கு ஒன்று ஏற்கெனவே செயற்பட்டு வருவது பற்றி ‘மறுமொழி’யில் சில மாதங்களுக்கு முன்னர் செய்தி வந்திருந்தது.

Related:  மைக்றோசொஃப்ட் இயக்குனர் சபையிலிருந்து விலகுகிறார் பில் கேட்ஸ்!

LG நிறுவனமும் தனது 8K மொடல்களை அறிமுகப்படுத்தியது. ஆனால் அது தனது மாடல்களை ‘Real 8K’ என்று கூறி அறிமுகப்படுத்தியது தான் வித்தியாசம். அவர்களது திரைகள் OLED வகையான 77, 88 அங்குல அளவைகளைக் கொண்டவை.

SONY, Panasonic, Hisense ஆகிய நிறுவனங்களும் தமது 8K மாடல்களைக் காட்சிப்படுத்தியிருந்தன.

இவற்றை விட, பலவகையான மின்சார வாகனம் சம்பந்தப்பட்ட புதிய கருவிகள், தயாரிப்புகள், தானியங்கும் வாகனங்களை மையப்படுத்திய வன்பொருள் மென்பொருட்கள் மற்றும் செயற்கை விவேகம் (Artificial Intelligence) சம்பந்தமான புதிய வரவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>