CBC கவிதைப் போட்டியில் பங்குபெறும் கயல்விழியின் ‘Tuxedo Court’
கனடிய பிரதான ஊடகமான CBC நடத்தும் வருடாந்த கவிதைப் போட்டியில், இந்த வருட (2021) நீண்ட பட்டியலில் தமிழ்க் கனடிய கவிஞரும், எழுத்தாளருமான கயல்விழியின் ‘Tuxedo Court’ என்ற கவிதையும் இடம்பெறுகிறது.

இந்த வருட கவிதைப் போட்டியில் 31 எழுத்தாளர்களின் கவிதைகள் நீண்ட பட்டியலுக்குத் தெரிவாகியுள்ளன. இறுதித் தேர்வில் வெற்றி பெறும் கவிஞருக்கு Canada Council for the Arts அமைப்பிலிருந்து $ 6,000 டாலர்கள் பரிசாகக் கிடைக்கும். அதே வேளை, பரிசு பெறும் கவிதை CBC Books என்னும் பிரசுரத்தில் இடம் பெறுவதோடு அதி எழுதிய கவிஞருக்கு Banff Centre for Arts and Creativity என்னும் அமைதியான், அழகிய இயற்கைச் சூழலில் இரண்டு வாரம் தங்கி தம் படைப்புக்களை உருவாக்க வசதி செய்து கொடுக்கப்படும்.
அத்தோடு, இப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகும் நான்கு பேருக்கு Canada Council for the Arts அமைப்பினால் தலா $1,000 சன்மானமாக வழங்கப்படும்.
நீண்ட பட்டியலிலிருந்து தெரிவாகும் குறும் பட்டியல் நவம்பர் 18 அன்றும், வெற்றி பெறும் கவிதைக்குரியவர் நவம்பர் 24 அன்றும் அறிவிக்கப்படும். CBC கவிதைப் போட்டிக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அதே வேளை CBC புனைவல்லாத படைப்புகளுக்கான போட்டி (CBC Nonfiction Prize) க்கான விண்ணப்பங்கள் ஜனவரி மாதத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
கயல்விழி
தற்போது கனடாவில் வாழும் கவிஞர் கயல்விழி, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகழில் வாழ்ந்தவர். ‘Fat with Love’ என்ற அவரது சிறுகதை Room சஞ்சிகையில் வெளிவந்தது. ‘Salt’ என்ற அவரது நூல் 2015 CBC Nonfiction பரிசுக்கான போட்டியில் குறும் பட்டியலுக்குத் தெரிவாகியிருந்தது. கனடாவிலும், அமெரிக்காவிலும் நடைபெற்ற பல கவிதா நிகழ்வுகளிலும், கதி சொல்லும் நிகழ்வுகளிலும் கயல்விழி பங்குபற்றியிருக்கிறார்.
கயல்விழியின் கவிதையின் ஆரம்ப வரிகள்…
in toronto, i comb the streets for a folktale,
a dark woman smacking her lips, pulling
mango hair out of her teeth, tamil songs
on the radio blueing the noon hour.
ma hums in the kitchen while pa reads
the newspaper and i wonder, is this home.
(மூலம்: CBC இணையத்தளம்)