Entertainment

Britain’s Got Talent போட்டியில் 10 வயது சூபர்ணிகா நாயர் அசத்தல் – சபையினர் எழுந்துநின்று மரியாதை!

ஏ.ஆர்.ரஹ்மான் ருவிட்டரில் பாராட்ட்டு

பிரித்தானியாவில் நடைபெற்றுவரும் உலகப் புகழ்பெற்ற திறமைப் போட்டி நிகழ்வான Britain’s Got Talent நிகழ்ச்சியில் பாடிய 10 வயது சூபர்ணிகா நாயருக்கு சபையினரும், நீதிபதிகளும் எழுந்துநின்று பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

இப்படியான போட்டிகளில் அசாத்திய திறமைகளையுடையவர்களுக்கு களம் கொடுக்கப்படுகிறது. போட்டியாளர்களின் திறமைகளைப் பொறுத்து நீதிபதிகளில் ஒருவரோ அல்லது எல்லோருமோ எழுந்து நின்று பாராட்டுவது போட்டியாளர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரமாகக் கருதப்படுவது வழக்கம்.

சூபர்ணிகா நாயர் பிரித்தானியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண். மேடையில் அவள் தன் குரலின் சாமர்த்தியத்தைக் காட்ட ஜூடி கார்லண்ட் பாடிய The Trolley Songஐத் தேர்ந்தெடுத்திருந்தாள். இப்பாடல் படத்துக்காக ஹியூ மார்ட்டின், றால்ஃப் பிளேன் அவர்களால் எழுதப்பட்ட இப்பாடலை ஜூடி கார்லண்ட் Meet Me in St. Louis (1944) இல் பாடியதன் மூலம் பிரபலமாக்கியிருந்தார்.



இப் பாடலை மிகவும் திறமையாகப் பாடிய சூபர்ணிகாவைப் பாடலின் நடுவில் இடைமறித்த, நீதிபதிகளில் ஒருவாராகிய சைமன் கவெல், சூபர்ணிகாவின் குரலில் இருக்கக்கூடிய மாறுபாடுகளை அறிவதற்காக ஜூடி கார்லண்டின் இன்னுமொரு பாட்டைப் பாடும்படி கேட்டார். அப்பாட்டை இன்னும் மிகத் திறமையாக ஒப்புவித்த சூபர்ணிகாவுக்கு நீதிபதிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த சபையும் எழுந்து நின்று ஆர்ப்பரிப்பினால் அங்கீகாரம் வழங்கியது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல் இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் சூபர்ணிகாவின் நிகழ்ச்சியைப் பற்றி “Nice to wake up to this” என ருவீட் மூலம் புகழ்ந்திருந்தார்.

He captioned it as, “Nice to wake up to this.”A.R.Rahman✔@arrahman

https://youtu.be/ZSNDkmZiHk4  YouTube ‎@YouTube

4,164Twitter Ads info and privacy517 people are talking about this

“இப்படி மலை போல ஒரு பாட்டை நீ ஏறிக் கடந்துவிட்டாய்” என நீதிபதிகளில் ஒருவராகிய டேவிட் வல்லியம்ஸ் தெரிவித்தார்.