EntertainmentIndiaNews & Analysis

‘Big Boss 5’ | கமல்ஹாசனுக்குப் பதில் சிலம்பரசன்?

‘பிக் பொஸ்’ நிகழ்ச்சியின் தமிழ் மொழியிலான ஒளிபரப்பு நான்கு சீசன்களை முடித்து ஐந்தாவதில் காலடி எடுத்து வைக்கிறது. ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான இந் நிகழ்ச்சியை இதுவரை காலமும் உலகநாயகன் கமல்ஹாசன் நடத்தி வந்தார். இந் நிகழ்ச்சி அவரது அரசியல் பிரச்சார மேடையாகவும் அவருக்குப் பலனைத் தேடித்தந்தது.

தற்போது அவர் அரசியலில் குதித்துவிட்டதனால் இந் நிகழ்ச்சியில் பங்குகொள்ள முடியாது போகிறது. ஏப்ரல் 6 இல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி, மக்கள் நீதி மையம் போட்டியிடுகின்றது. இத் தேர்தலில் அவர் எதிர்பாராத வெற்றியைப் பெற்றாலோ அல்லது கணிசமான அளவு வாக்குகளைப் பெற்றாலோ அவர் அரசியலில் அதிகளவு நேரம் செலவழிக்கவேண்டி ஏற்படலாம்.

இதை அடிப்படையாகக் கொண்டு ‘பிக் பொஸ்’ தயாரிப்பாளர் கமல்ஹாசனின் இடத்துக்கு சிலம்பரசனை (சிம்பு) நியமிப்பதற்குத் திட்டம் தீட்டி அவரோடு பேச்சுவார்த்தையையும் தொடங்கிவிட்டார்களெனத் தெரிகிறது. இதற்கு சிலம்பரசனும் விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இதுபற்றித் திடமான முடிவெதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனப்படுகிறது.

‘பிக் பொஸ் 5’ தின் தயாரிப்பு வேலைகள் ஏர்கெனவே ஆரம்பமாகிவிட்டது. ஜூன் – ஜூலை மட்டில் நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் எண்ணம் தயாரிப்பாளரிடம் இருக்கிறது. ‘பிக் பொஸ் 4’, கொரோணாவைரஸ் தாக்கத்தால் பின்போடப்பட்டது போல இதன் நிலைமையும் எப்படிப் போகுமோ தெரியாது.

நிகழ்ச்சி பின்போடப்பட்டு, கமல்காசனும் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டால் நிகழ்ச்சியில் மாற்றங்கள் நடைபெறாமலும் போகலாம். பொறுத்திருங்கள் கூறுவோம்….