Adampankulam Massacre |அடம்பன்குளம் படுகொலை
எண்பதுகளில் நடைபெற்ற இன ரீதியான படுகொலைகளில் நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்ட படுகொலை தான் அடம்பன்குளம் படுகொலை அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசமே அடம்பன்குளம் சுமார் திருக்கோவில் பகுதியிலிருந்து 20 மைல் தூரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது.
இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் வயல் வேலை நன்னீர் மீன்பிடி விவசாயம் என வாழ்ந்து வந்தனர் அந்த வகையில் 1986 ஆம் ஆண்டு இடம் பெற்ற இனக்கலவரங்களில் அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் இனந்தெரியா நபர்களினாலும் ஆயுத தாரிகளினாலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
அதன்படி 1986.02.19 ஆம் திகதி அடம்பன்குளம் கிராமத்திற்கு இரவு வேளையில் உட்புகுந்த இனந்தெரியாத நபர்கள் மற்றும் இராணுவத்தினர் அங்கிருந்த சுமார் 104 க்கு அதிகமான பொது மக்களை வெட்டியும் ஆயுதங்களினால் சுட்டும் கொலை செய்தனர் இப்படுகொலைகள் வாழ்நாளில் என்றுமே மறக்கமுடியாத ஒரு வடுவாகவே அமைந்திருக்கும் அதன் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளைய தினம் மதியம் தங்கவேலாயுதபுரம் பகுதியில் அனுஸ்டிப்பதற்கு பிரதேச மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஆகையினால் சமூக நலன்விரும்பிகள் ஊடகவியலாளர்கள் பிரதேச மக்கள் என பலரையும் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக்குழுவினர்.