முல்லைத்தீவில் ஆதி ஐயனார் கோவிலை இடித்துவிட்டுப் புத்தர் சிலை நிர்மாணம்
முல்லைத்தீவிலுள்ள குருந்தூர்மலை என்னுமிடத்தில் தமிழர்களால் வழிபட்டு வந்த ஆதி ஐயனார் கோவிலை அகற்றிவிட்டு அவ்விடத்தில் புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விடத்தில் புத்த கோவிலொன்றை அமைப்பதற்காக பெளத்த தேரர்கள் சிலர் முயன்றதாகவும் அதற்குத் தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது அரசாங்கம் சமீபத்தில் உருவாக்கிய தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரின் துணையுடன் தேசிய பாரம்பரிய அமைச்சர் தலையிட்டு புத்தர் சிலையை அங்கு நிறுவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.