• Post category:HEALTH
  • Post published:October 28, 2020
Spread the love

மருத்துவமனையில் அனுபதிக்கப்பட்ட 80% மான கோவிட்-19 நோயாளிகள் வைட்டமின்-D குறைபாடுடையவர்களாக இருந்தார்கள் என ஸ்பெயின் நாட்டில் சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது.

ஸ்பெயின் நாட்டின் சான்ராண்டெர் நகரிலுள்ள மார்கே டி வால்டெசில்லா பல்கலைக்கழக மருத்துவமனையில் மார்ச் 10 முதல் 31 வரை செய்யப்பட்ட இந்த ஆய்வில் அங்கு அனுமதிக்கப்பட்ட் 216 நோயாளிகைன் வைட்டமின்-Dஅளவுகள் பரிசோதிக்கப்பட்டன. அதே வேளை, அப் பிரதேசத்தில் வாழும், ஒத்த வயது, பால் வகையினரான 197 பேரினது வைட்டமின்-D அளவுகளும் எடுக்கப்பட்டு இரண்டு தரவுகளும் ஒப்பிடப்பட்டன.

இந்த 216 நோயாளிகளில் 19 பேர், மூன்று மாதமாக வைட்டமின்-D மாத்திரைகளை எடுத்து வந்திருக்கின்றனர். வைட்டமின்-D மாத்திரைகளை எடுக்காத நோயாளிகளில் 82% பேரில் வைட்டமின்-D யின் அளவு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்தோடு, பெண்களை விட ஆண்களில் வைட்டமின்-D யின் அளவு குறைவாக இருப்பதும் அவதானிக்கப்பட்டது.



வைட்டமின்-D சிறுநீரகங்களினால் சுரக்கப்படும் ஒரு ஹோர்மோன். இது இரத்தத்திலுள்ள கல்சியத்தின் செறிவைக் கட்டுப்படுத்துகிறது. உடலின் நோய்த் தடுப்பாற்றலுக்கு கல்சியம் ஒரு முக்கிய காரணியாகச் செயற்படுகிறது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியைச் செய்த விஞ்ஞானிகள்.

வைட்டமின்-D குறைபாடு இருதய வியாதி, நீரிழிவு, புற்றுநோய், மல்ரிபிள் சிலறோஸிஸ் ஆகிய நோய்களுக்கும் காரணமாக அமைகிறது. அதே வேளை, வைட்டமின்-D குறைபாடுள்ளபோது ஃபுளூ (சுரம்), HIV, ஹெப்படைட்டிஸ் C வைரஸ்கள் இலகுவாகத் தொற்றிக்கொள்கின்றன எனவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ஸ்பெயின் நாட்டின் கன்ரபிறியா பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான டாக்டர் ஹோசே ஹேர்ணாண்டேஸ் இணைந்து செய்த இந்த ஆய்வு ஜேர்ணல் ஒஃப் கிளினிகல் என்டோகிறைனோலொஜி அண்ட் மெற்றபோலிஸிம் சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது.

Print Friendly, PDF & Email