Sri Lanka

6 மாத – இடைக்கால அரசொன்றுக்கு தேசிய மக்கள் சக்தி தயார் – அனுரகுமார

இடைக்கால அரசின் பிரதமராக வர சஜித் பிரேமதாசவும் தயார்

தற்போது நிலவும் ஆபத்தான் சூழ்நிலைக்கு விரைவில் முடிவைக் கொண்டுவருவதுடன் ஆட்சியை ஸ்திரப்படுத்த்ம் பொருட்டு 6 மாதகால இடைக்கால அரசொன்றை ஏற்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி தயார் என அத தலைவர் அனுரகுமார திசநாயக்கா தெரிவித்துள்ளார். தனது ஆதரவைத் தருவதற்கு பின்வரும் நிபந்தனைகளை அவர் முன்வைத்துள்ளார்.

  1. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச உடனே பதவி விலக வேண்டும்
  2. பிரதமர் பதவி தற்போது வெற்றிடமாக இருப்பதனால் சபாநாயகர் நாட்டின் காபந்து ஜனாதிபதியாக (caretaker president) இருக்கவேண்டும்
  3. தற்போதைய உறுப்பினர்களாலான அரசாங்கம் மக்களது ஆணையைக் கொண்டதல்ல என்ற காரணத்தால் இவ்வரசாங்கம் முன்வைக்கும் மாற்றங்கள் எதையும் மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவே அடுத்த 6 மாதங்களுக்குள், புதிய மக்களாணையுடன் கூடிய அரசொன்று உருவாக்கப்படவேண்டும். அதுவரையில் தற்காலிக நிர்வாகக் கட்டமைப்பாகப் பின்வரும் விடயஙகளை நாம் பரிந்துரைக்கின்றோம்: (அ): தற்காலிக அரசாங்கமொன்றைத் தெரிவுசெய்யும் பொறுப்பை தேசிய மக்கள் சக்திக்கு வழஙகுங்கள். தற்போது நாட்டில் நிலவும் ஒழுஙகீனத்தைச் சீர்படுத்த்தி அதை ஒரு புதிய பாதையில் கொண்டுசெல்லும் வல்லமை எம்மிடம் மட்டுமே உண்டு. அதஹ்ற்கு நாம் தயாராகவும் இருக்கிறோம். (ஆ): அல்லாதபோது நீங்கள் ஒரு குறுகிய காலத்துக்கு தற்காலிக அரசொன்றைக் கட்டமையுங்கள். நாம் எதிர்க்கட்சியில் இருந்து அதற்கு ஆதரவு வழஙகுவோம்.
  4. மேற்கூறப்பட்ட வழிகளில் அமைக்கப்படும் தற்காலிக அரசு பின்வரும் கடமைகளைச் செய்யவேண்டும்: (அ). உடனடியாக அரசியலமைப்பபின் 21 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பறிப்பதோடு அவரின் பதவிக்காலத்தையும் குறைக்க வேண்டும்.(ஆ): நாட்டு மக்கள் அனுபவிக்கும் துன்பஙகளிலுருந்து விடுபடுவதற்கு உடனடியான நிவாரண முயற்சிகளை எடுக்க வேண்டும். (இ): நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் திருத்தத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து அதை நிறைவேற்ற வேண்டும். (ஈ): ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைக் களைவதற்கான அரசியமைப்புத் திருத்தத்தை அங்கீகரிக்கும் மக்கள் வாக்கெடுப்பைத் தேர்தலோடு சேர்த்து நடத்த வேண்டும். காபந்து அரசு பதவியேற்று 6 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும். (உ): தற்காலிக அரசை மேற்பார்வை செய்யும் அல்லது அதற்கு ஆலோசனை வழஙகும் ஒரு குழு நியமிக்கப்படவேண்டும். அதில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள், மதத் தலைவர்கள், தொழிலாளர் அமைப்புக்களின், சங்கங்களின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்க வேண்டும்.

இதைவிட, தற்காலிக அரசு ஒன்றை அமைக்கப்பட்டால் பிரதமர் பதவியை ஏற்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தயாராக உள்ளதாகவும் ஆனால் அதற்கு முன்னர் ஜனாதிபதி பதவி விலகவேண்டுமெனவும் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.