Spread the love

Tam Sivathasan, B.Eng. (Hons)

பாகம் ஒன்றில் தகவல் தொழில்நுட்பத்தில் பாவிக்கப்படும் அடிப்படைக் கூறுகளான சொற்பிரயோகங்கள் சிவற்றைப் பற்றியும், தகவல் (பண்டம்) எப்படி வண்டிகளால் (carrier) சுமக்கப்பட்டு நெடுந்தூரம் கொண்டு செல்லப்படுகின்றன என்பது பற்றியும் பார்த்தோம். பாகம் இரண்டில் எப்படி அந்தத் தொடர் வண்டி அலைவரிசைக் கற்றைகள் அவற்றின் தன்மை, பாவனை, செயற்பாடு என்ற முறையில் பகுக்கப்பட்டுப் பங்கிடப்படுகின்றன எந்பதைப் பார்ப்போம்.

5G | எளிய முறையில் தகவல் தொழில்நுட்பம் - பாகம் 2 1
5G வலையில் அகப்படும் உலகம்

தொலைக் காட்சி, கைத் தொலைபேசி, வானொலி ஆகியன தமது தகவல்களை ரேடியோ அலைகள் வடிவத்தில் பெற்று அதிர்வுகளாக ஒளி, ஒலி அலைகளாக மாற்றுகின்றன. இந்த ரேடியோ அலைகள் மின்காந்த (electromagnetic waves) வகையைச் சேர்ந்தவை. அவ்வலைகள் குறிக்கப்பட்ட அதிர்வெண்களில் (frequencies) பரிமாறப்படுகின்றன. இப்படிப் பல அதிர்வெண்களைக் கொண்ட அடுக்குகளை அலைக்கற்றை (spectrum) என பாகம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன்.

இப்படியான மின்காந்த அலைகளின் பட்டை (electromagnetic spectrum), குறைந்த அதிர்வெண்ணிலிருந்து கூடிய அதிர்வெண் வரை, 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுப் பாவிக்கப்படுகிறது. வலுவைப் பொறுத்தவரையிலும் அதிகுறைந்த அதிர்வெண், அதிகுறைந்த வலுவையும், அதிகூடிய அதிர்வெண் அதிகூடிய வலுவையும் கொண்டிருக்கும் என்பதனால் அந்த ஒழுங்கிலேயே அவை இங்கு விபரிக்கப்படுகின்றன.

5G | எளிய முறையில் தகவல் தொழில்நுட்பம் - பாகம் 2 2

அவையாவன (ஏறு வரிசையில்): ரேடியோ அலைகள் (Radio Waves), மைக்ரோ அலைகள் (Micro Waves|, இன்ஃப்றா றெட் அலைகள் (Infra Red Waves), பார்க்கக்கூடிய அலை (Visible), அல்ட்றா வயலட் அலைகள், எக்ஸ் கதிர்கள் (X-Rays), காமா கதிர்கள் (Gamma Rays) ஆகும். இவற்றில் பார்க்கக்கூடிய அலைக்கற்றையைத் தான் நாம் ஏழு வர்ணங்களாக (நிறமாலை)மேலும் பிரிக்கிறோம்.

இந்த மின்காந்த அலைவரிசைப் பட்டையில் எம் வாசகர்களுக்கு அதிகம் தொடர்புடையது றேடியோ அலைககள் அல்லது அலைவரிசை என்பதால் அதைப்பற்றிக் கொஞ்சம் விபரமாகப் பார்ப்போம்.

றேடியோ அலைகள்

ரேடியோ அலைகள், 3 KHz இலிருந்து 3 GHz வரை இருக்கும் அலைக்கற்றை அல்லது பட்டைக்குள் (spectrum) அடங்கும். இதை ULF, ELF, AM , FM, VHF, UHF எனப் பிரித்து அவற்றின் பாவனைக்கேற்பப் பங்கிடப்படும்.

அலைவரிசைப் பங்கீடு

அமெரிக்காவில் இவ்வலைக்கற்றையைப் பிரித்தளிக்கும் வேலையைத் தேசிய தொலைத் தொடர்பு, தகவல் அதிகாரசபை (National Telecommunications and Information Administration) செய்கிறது. கனடாவில், கனடிய வானொலி, தொலைத் தொடர்பு ஆணையம் (Canadian Radio and Telecommunication  Commission) இவ் வேலையைச் செய்கிறது. 

புதிதாக ஒரு அலைவரிசை சந்தைக்கு வரும்போது இன் நிறுவனங்கள் அவற்றை ஏலத்தில் விடுவதுமுண்டு. அப்போது பல பணக்கார நிறுவனங்கள் இவற்றை முண்டியடித்து வாங்குவார்கள். சில வேளைகளில் அரசாங்கம் தன் அதிகாரத்தைப் பாவித்து சிறுபான்மை இனங்களின் கலாச்சார அமைப்புகளின் தேவைகளுக்காகவோ அல்லது மத அமைப்புகளின் தேவைகளுக்காகவோ இவற்றை ஒதுக்கிக் கொடுக்கின்றன. இவ்விடயத்தில் இவற்றைக் கோரும் அமைப்புகள் பற்றியும் அவற்றின் தகமைகள் பற்றியும் தீர விசாரித்தே இவ்வலைவரிசைகளை அதற்குப் பொறுப்பான அரச நிறுவனம் ஒதுக்குகிறது. இவ்வலைவரிசையில் இருக்கக்கூடிய ‘துண்டுகள்’ (slots) எல்லாம் அநேகமாகத் தீர்ந்துபோய் விடுவதால் எனப்படும்.

நீங்கள் AM வரிசையில் ஒரு வானொலி தொடங்கப்போகிறீர்கள் என்றால் இந்த அலைவரிசையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் 3KHz முதல் 1700 KHz வரையிலான பட்டைக்குள் (bandwidth) இருக்கக்கூடிய ஒரு அலைவரிசையைத் (துண்டைத்) தேர்ந்தெடுக்க வேண்டும். இவை ஆரம்பத்தில் பிரித்தளிக்கப்பட்டபோது ஏற்கெனவே விடயம் தெரிந்தவர்கள், அல்லது வசதியுள்ளவர்கள் வாங்கி விட்டிருப்பார்கள். அதனால் ஏற்கெனவே வாங்கிய ‘துணடை’ ஒருவர் விற்கும்போதோ அல்லது பறிமுதல் செய்யப்பட்ட ‘துண்டு’ ஏலத்தில் மீள்விநியோகம் செய்யப்படும்போதோதான், அனேகமாக, குறிப்பிட்ட அலைவரிசையை நீங்கள் வாங்குவது சாத்தியமாகும்.

Related:  இந்தியாவில் 'டிஜிட்டல் மயமாக்கும்' பணிகளுக்கு கூகிள் 10 பில்லியன் டாலர்களை ஒதுக்குகிறது
குறுக்கீடுகள் (Interferences)

சாதாரண AM அலைவரிசைக்குப் 10KHz பட்டை (துண்டு) ஒதுக்கப்படும். அந்த அலைவரிசையின் சொந்தர்காரர் அதற்கென வழங்கப்பட்ட எல்லைகளுக்க அப்பால் ஒலிபரப்ப முடியும். சில வேளைகளில் தொழில்நுட்பக் காரணங்களினால் அருகருகே ஒதுக்கப்பட்ட அலைவரிசைப் பட்டைகள் ஒன்றுக்கொன்று குறுக்கிடும்போது அது ‘தலையீடு’ (interference) அல்லது ‘குறுக்குப் பேச்சு’ (cross talk) எனப்படும். இது சில வேளைகளில் பரிவர்த்தனை நிலையங்களிலோ (transmitting stations) அல்லது வானொலிப் பெட்டிகளிலோ (radio receivers) ஏற்படும் கருவிக் கோளாறுகளால் ஏற்படலாம்.

பாகம் ஒன்றில் குறிப்பிட்டது போல, ஒவ்வொரு பட்டைகளும் தொடர் வண்டியின் ஒரு பெட்டியெனில் அதிலுள்ள குறிப்பிட்ட பெட்டியில் வரும் தகவலைக் கச்சிதமாகப் பிரித்தெடுக்கும் வல்லமை உங்கள் வசம் இருக்கும் வானொலிப் பெட்டியில் இருக்கவேண்டும். உங்கள் வானொலிப் பெட்டி ஒரு தகவல் வடிகட்டி. சிறந்த வடிகட்டியானால் அயல் பெட்டிகளில் பயணம் செய்யும் தகவல்களின் ‘தலையீடுகளையும்’, ‘குறுக்குப் பேச்சுக்களையும்’ துல்லியமாக வடிகட்டி உங்களுக்கு நேர்த்தியான இசையையோ அல்லது தகவலையோ தரும்.

அதி குறைந்த அதிர்வெண்கள் (ELF, VLF)

அதி குறைந்த றேடியோ அதிர்வெண்களை உள்ளடக்கிய அலைக்கற்றையை Extremely Low Frequency (ELF) Radio Waves அல்லது Very Low Frequencies (VLF) என்பார்கள். இது பாறைகளையும், தண்ணீரையும் துளைத்துக்கொண்டு நீண்ட தூரத்துக்குப் போக வல்லதால் சுரங்கங்கள், குகைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றிலுள்ளோருடன் தொடர்புகளைப் பேணுவதற்காகப் பாவிக்கிறார்கள். மின்னல் வரும்போது பிறப்பிக்கப்படும் மின்காந்த அலைகள் இந்த வகையைச் சாரும். இந்த அலைகள் மண்ணுக்கும் விண்ணுக்குமிடையில் (ionosphere) பட்டுத் தெறிக்கும்போது சில வேளைகளில் செய்மதித் தொடர்புகளின்போது அனுப்பப்படும் சமிக்ஞைகளைக் (signals) குழப்பி விடுகின்றன.

குறைந்த, மத்திய அலைவரிசைகள் (Low & Mediuam Frequencies)

இந்த வரிசையில் 535 KHz முதல் 1700 KHz (1.7 MHz) வரை ஒலிபரப்புக்களையோ அல்லது தகவல்கள் அனுப்புவதையோ செய்யலாம். கப்பல்கள், விமானங்கள் மற்றும் AM வானொலிகள் போன்றவற்றுடன் தொடர்புகளைப் பேணவும், ஒலிபரப்புகளைச் செய்யவும் இந்த அலைக்கற்றை வரிசை பாவிக்கப்படுகின்றது.

AM அலைவரிசை (AM Radio Broadcast)

AM அலைவரிசையில் 1906 முதல் ஒலிபரப்பு நடைபெற்று வருகிறது. அதற்கான அலைவரிசை ஒதுக்கீடு 1920 இல் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது

AM அலைவரிசையில் செய்யப்படும் ஒலிபரப்பு நீண்ட தூரத்துக்குச் செல்கிறது. குறிப்பாக இரவில் விண்ணின் அயன் மண்டலம் (ionosphere) துலக்கமாக இருப்பதால் ஒலிபரப்பு அதில் பட்டுத் தெறித்து நெடுந்தூரத்துக்குச் செல்கிறது. AM ஒலிபரப்புக்குக் குந்தகம் விளைவிப்பது இரும்பு கலந்து அமைக்கப்பட்ட உயர் கட்டிடங்கள். இக்கட்டிடங்களினால் ஒலிபரப்பின் சத்தம் குறைக்கப்படுகிறது.

றேடியோ அலைப் பட்டையில் அலைவரிசைகளைப் பாவிக்கும் சாதனங்கள்
 • AM radio – 535 kilohertz to 1.7 megahertz
 • Short wave radio – bands from 5.9 megahertz to 26.1 megahertz
 • Citizens band (CB) radio – 26.96 megahertz to 27.41 megahertz
 • Television stations – 54 to 88 megahertz for channels 2 through 6
 • FM radio – 88 megahertz to 108 megahertz
 • Television stations – 174 to 220 megahertz for channels 7 through 13
 • Garage door openers, alarm systems, etc. – Around 40 megahertz
 • Standard cordless phones: Bands from 40 to 50 megahertz
 • Baby monitors: 49 megahertz
 • Radio controlled airplanes: Around 72 megahertz, which is different from…
 • Radio controlled cars: Around 75 megahertz
 • Wildlife tracking collars: 215 to 220 megahertz
 • MIR space station: 145 megahertz and 437 megahertz
 • Cell phones: 824 to 849 megahertz
 • New 900-MHz cordless phones: Obviously around 900 megahertz!
 • Air traffic control radar: 960 to 1,215 megahertz
 • Global Positioning System (GPS): 1,227 and 1,575 megahertz
 • Deep space radio communications: 2290 megahertz to 2300 megahertz
பண்பலை வானொலி ஒலிபரப்பு (FM Radio Broadcast)

AM ஒலிபரப்பில் காணப்பட்ட கரகரப்பைத் தவிர்த்து தரமான செவிகளுக்கினிய ஒலிபரப்பைத் தரவென 1939 இல் எட்வின் ஆம்ஸ்ட்றோங் என்பவரால் உருவாக்கப்பட்டதே FM.

Related:  நிகோலா ரெஸ்லா | உலகுக்கு ஒளி தந்த இரண்டாவது சூரியன்

இவ்வலைவரிசைகளில் FM றேடியோ, ரெலிவிசனின் ஒலி, பொதுப்பணியில் பாவிக்கப்படும் றேடியோ, கைத் தொலைபேசிகள், ஜி.பி.எஸ். ஆகியன ஒலிபரப்பாகின்றன. இவை எல்லாமே FM முறையில்தான் தமது ஒலிபரப்புகளைச் செய்கின்றன. பாகம் 1 இல் குறிப்பிட்டது போல், இந் நடைமுறையின்போது, ஒலி (audio), தரவு (data) ஆகிய வடிவங்களிலுள்ள சமிக்ஞைகள் ‘சுமக்கும் அதிர்வலையில்’ (carrier wave) (வாகனம்) பண்பேற்றம் செய்யப்பட்டு (modulation) அனுப்பி விடப்படுகின்றன. சூழல் காரணங்களினால் பாதிப்புகள் ஏற்பாடாமையால் FM ஒலிபரப்பு, AM ஐ விடத் தரமானதாகவும் துல்லியமாகவும் இருக்கிறது.

FM வானொலி 88 முதல் 108 MHz, FM அலைவரிசையில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இதன் வீச்சு (range) குறைவாக இருப்பதால் பெரும்பாலான நகரங்களில் ஒரே அலைவரிசையில் ஒலிபரப்புச் செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. அலைவரிசையைப் பகிர்ந்தளிக்கும் ஆணையம் இவ்வொலிபரப்புக்கான எல்லைகளையும் தீர்மானிக்கிறது. ஒலிபரப்பின் வலுவை (கிலோ வாட்ஸ்) அதிகரிக்கும்போது இவ்வொலிபரப்பு சில வேளைகளில் இவ்வெல்லைகளையும் தாண்டிச் செல்ல நேரிடுகிறது. எல்லைப் பகுதிகளில் பயணம் செய்யும் வாகனங்களிலுள்ள வானொலிகள் அருகிலுள்ள நகரில் இதே அலைவரிசையில் செய்யப்படும் ஒலிபரப்புடன் சேர்ந்து ஒரே அலைவரிசையில் இரண்டு வெவ்வேறு ஒலிபரப்புகளை நாம் கேட்பதுண்டு.

உயர் அதிர்வெண்கள் (Higher Frequencies)

High Frequency (HF), Very High Frequency (VHF), Ultra High Frequency (UHF) ஆகிய அலைப்பட்டைகள் இவற்றுக்குள் அடங்கும்.

சிற்றலை வானொலி (Shortwave radio)

சிற்றலை வானொலி 1.7 MHz முதல் 30 MHz வரையிலுள்ள HF அலைவரிசையில் ஒலிபரப்பாகிறது. இந்த அலை வரிசை மேலும் 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் சில, ‘வொய்ஸ் ஒஃப் அமெரிக்கா’ (Voice of America), பி.பி.சி. (British Broadcasting Corporation (BBC)), வொய்ஸ் ஒஃப் ரஸ்யா (Voice of Russia) பிரபல வானொலிகளின் ஒலிபரப்புக்கெனக் கொடுக்கப்பட்டுள்ளது. உலகில் இப்படியான நூற்றுக்கணக்கான சிற்றலை ஒலிபரப்பு நிலையங்கள் இயங்குகின்றன. இவ்வொலிபரப்புகள் ஆயிரக் கணக்கான மைல்களுக்குப் பயணம் செய்ய வல்லன. இவ்வொலிபரப்பின்போது சமிக்ஞைகள் அயனமண்டலத்தில் பட்டுத் தெறித்து உலகின் வெவ்வேறு பாகங்களையும் சென்றடைகின்றது.

ரெலிவிசன் (Telivision)

54 – 88 MKz வீச்சில், 2 முதல் 6 வரையுள்ள சனல்களில் இது ஒலிபரப்பாகிறது.

ரெலிவிசன் ஒளிபரப்பு 1946 இல் பாவனைக்கு வந்தது. 1949 இல் வர்த்தக ஒளிபரப்புகள் அமெரிக்காவில் ஆரம்பமாகின.

அதியுயர் அலைவரிசை (Highest frequencies)

SHF மற்றும் EHF ஆகிய அலைவரிசைகள் இவை. சில வேளைகளில் ‘மைக்குரோவேவ்’ அலைவரிசை எனவும் கூறப்படுகிறது. காற்றிலுள்ள துணிக்கைகள் இவ்வதிர்வெண்களில் வரும் அலைகளை ‘உறிஞ்சி’ (absorb) விடுவதால் இவ்வலைவரிசையின் சிற்றலை வடிவங்கள் ஒடுக்கமான பாதைகளில் ஒலிக்கற்றைகளை அனுப்புவதற்குப் (satellite dish antennas) பாவிக்கப்படுகின்றன. இரண்டு நிரந்தரமான நிலைகளுக்கிடையே (station and antenna) குறுகிய தூர உயர் பட்டை (high bandwidth) தகவற் பரிமாற்றத்துக்கு இம் முறை உகந்தது.

Related:  கருணா விடுதலைப்புலிகளின் தலைவரின் இருப்பிடத்தைக்கூடக் காட்டித்தரவில்லை - சரத் பொன்சேகா
. 5G | எளிய முறையில் தகவல் தொழில் நுட்பம் – பாகம் 1
Wi-Fi, Bluetooth, Wireless USB

கணனிகள், நவீன வாகனங்களிலும் எலெக்ட்றோனிக் கருவிகளிலும் பாவிக்கப்படும் Wi-Fi, Bluetooth, Wireless USB போன்ற இணைப்புக் கருவிகள் தமக்கிடையே தகவல்களைப் பரிமாறுவதற்கு SHF அலைவரிசையையே பாவிக்கின்றன. EHF ஐப் போன்று காற்றின் துணிக்கைகளால் இவ்வொலிபரப்பு தடைசெய்யப்படுவதில்லை. ஆனால் இவ்வொலிபரப்பின் போது அனுப்பப்படும் சமிக்ஞை வாகனங்கள், படகுகள், விமானங்கள் ஆகியவற்றின் சுவர்களில் பட்டுத் தெறிப்பதனால், இவ்வொலிபரப்பு தடையின்றி நிகழ, கருவிகளும் கணனியும் நேர்கோட்டில் இருப்பது அவசியம். ரேடார் பாவனையின்போதும் இதே அலைவரிசையில் தான சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன.

5G தகவற் தொடர்பு

நவீன கைத்தொலைபேசிகள், Wi-Fi வலையமைப்புகள் 6 GHz வரையிலான மைக்றோவேவ் (Microwave) அலைவரிசையில் தமது பண்டமான ஒலியையும், தரவையும் (voice and data) பெற்றுக்கொள்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் பரிமாறப்படும் தகவல்களின் தொகை அசுர வேகத்தில் வளர்ந்தது. அதே வேகத்தில் அவற்றின் பாவனையாளர்களின் எண்ணிக்கையும் வளர்ந்தது. பாகம் 1 இல் குறிப்பிட்டபடி, தொடர்வண்டியின் பெட்டிகளில் நெரிசல் அதிகரித்தது. ‘எடை’ அதிகரிப்பால் வண்டிகள் தாமதமாகின. ஒரே வழி இன்னும் பெட்டிகளைக் கூட்ட வேண்டும்.

கொள்கை வகுப்பாளர்கள், திட்டமிடலாளர்கள் ஒன்றுகூடி முடிவெடுத்தார்கள். தகவற்தொடர்பு தொழில்நுட்பத்தை அடுத்தபடிக்குக் கொண்டு செல்ல வேண்டும். அலைவரிசை மேலும் விஸ்தரிக்கப்பட்டது. இருக்கும் அலைவரிசையை 6 GHz யைவிட மேலே கொண்டு செல்ல வேண்டும். அது மைக்றோவேவ் வீச்சுக்குள் மட்டுமே இருக்கிறது. 6 GHz இலிருந்து 100 GHz வரைக்கும் போவதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இது ஒரு பரிச்சயமற்ற பிரதேசம். கட்டும் கருவிகள் (transmitters), அவிழ்க்கும் கருவிகள் (receivers), அனுப்பும் கோபுரங்கள் என எல்லாமே புதிதாக வடிவமைக்கப்பட வேண்டும். இதனால் கிடைக்கப்போகும் இலாபங்கள் வெறும் பண ரீதியாக மட்டுமல்ல, உலகின் ஆட்சி, மனித குலத்தின் மேலான ஆட்சி என விரிகின்றது. மேற்கு என்ற முயல் தூங்கிக்கொண்டிருக்க சீனா என்ற ஆமை தனது வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. Huawei என்று அந்த ஆமைக்குப் பெயர்.

‘எரி கதிர்’ – Active Denial System Video: History Telivision

இந்த அலைவரிசையில் இயக்கப்படும் ஒரு கருவி அமெரிக்க இராணுவத்தினால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ‘அக்டிவ் டினையல் சிஸ்டம்’ (Active Denial System) என்று பெயர். ஆர்ப்பட்டங்களில் மனிதரைக் குறிவைத்துக் கலைப்பதற்கென்று (அகற்றுவதற்கென்று) தயாரிக்கப்பட்டது. 96 GHz அலைவரிசையில் அனுப்பப்படும் கற்றை குறிவைக்கப்பட்டவரின் தோலுக்குள் புகுந்து நமைச்சலை ஏற்படுத்தும் தன்மையுடையது. அவர் ஆர்ப்பாட்டத்திலிருந்து அகன்றேயாக வேண்டும்.

இந்த அலைவரிசையில்தான் 5G கோபுரங்களிலிருந்தும் உங்கள் கைத்தொலைபேசிகளுக்கு தகவல்கள் வரப்போகின்றன. வரும் பாதையிலுள்ள உயிரினங்களுக்கு எதுவித தேர்வும் இல்லை. ஆர்ப்பாட்டக்காரரைப் போல் அவைகளும் அகன்றேயாகவேண்டும். இப்படித்தான் நடக்குமென்று voice அல்லது data என்னிடமில்லை. இப்படியும் நடக்கலாமென்று இப்போதைக்குச் சொல்லக்கூடிய அளவுக்கு இருகிறது.

தொடரும்…
Print Friendly, PDF & Email