48 நாடுகளின் குடிமக்கள் இலங்கை வர இலவச நுழைவு அனுமதி -

48 நாடுகளின் குடிமக்கள் இலங்கை வர இலவச நுழைவு அனுமதி

Spread the love

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க முயற்சி

29 August 2019

48 நாடுகளின் குடிமக்களுக்கு நுழைவு அனுமதிக் கட்டணம் நீக்கம் – குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பாசன் ரத்னாயக்க

48 நாடுகளின் குடிமக்கள் இலங்கை வருவதற்கு நுழைவு அனுமதியை முன்னரே பெற்றிருக்க வேண்டும் ஆனால் அதற்கான அனுமதிக்கட்டணம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து சரிந்து போயிருக்கும் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கையை அரசாங்கம் எடுத்திருகிறது என சிறீலங்கா அரசு நேற்று அறிவித்திருக்கிறது.

“இலவச னுழைவு அனுமதி என்றவுடன் பலரும் ‘நுழைவு அனுமதி’யைப் பெறாமலேயே சிறீலங்காவிற்கு வரலாம் என நினைக்கிறார்கள். அது தவறு. அனுமதிக்கான கட்டணம் தான் நீக்கப்பட்டுள்ளதே தவிர நுழைவதற்கான அனுமதி (விசா) முன்னரேயே பெறப்பட்டிருக்க வேண்டும்” என சிறீலங்கா சுற்றுலாத்துறை அபிவிருத்திச் சபையின் தலைவர் ஜொஹான்னி ஜயரத்ன ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பின்னர் சரிவடைந்திருந்த சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட பல முயற்சிகளின் ஒன்றாக, ஆகஸ்ட் 1 முதல், சிறீலங்கா வர விரும்பும் 48 நாடுகளின் குடிமக்களுக்கான நுழைவு அனுமதிக்கட்டணம் ($35) நீக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் சிறீலங்கா வருவதற்கு முன்னர் நுழைவு அனுமதி பெற்றிருக்க வேண்டுமென்பதில் எந்தவித மாற்றமுமில்லை என குடிவரவு,குடியகல்வு கட்டுபாட்டாளர் நாயகம் பசான் ரத்னாயக்க தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  'சப்பிரி கமாக்' திட்டத்தின் கீழ் கிராமிய அபிவிருத்திக்காக 28 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *