4 குழந்தைகள் உட்பட 5 இலங்கையர்கள் பாரிஸில் கொலை – குடும்ப விவகாரம் காரணம்

4 குழந்தைகள் உட்பட 5 இலங்கையர்கள் பாரிஸில் கொலை – குடும்ப விவகாரம் காரணம்

Spread the love

நான்கு குழந்தைகள் உட்பட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர், சனிக்கிழமை காலை, பாரிசில் கொலைசெய்யப்பட்டுள்ளார்கள். மேலும் மூவர் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பிரென்ச் தொலைக்காட்சி BFM TV செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் பாரிஸின் வடக்குப் பகுதியான Noisy-le-Sec என்னுமிடத்தில் வாழ்ந்து வந்ததாகவும், குடும்பப் பிரச்சினை காரணமாக ஆணொருவர், கத்தி, சுத்தியல் ஆகிய ஆயுதங்களினால் இக் குடும்பத்தைத் தாக்கியதாகவும் அறியப்படுகிறது.

இதில் காயமடைந்த ஒரு சிறுவன் சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள ஒரு மதுபானக் கடைக்குச் சென்று உதவி கேட்டதாகவும், இதைத் தொடர்ந்து பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்றார்கள் எனவும் தெரிய வருகிறது.

தனது மாமாவுக்கு திடீரென்று ‘விசர்’ பிடித்துவிட்டது என்றும், கத்தியாலும், சுத்தியலாலும் தனது குடும்பத்தைத் தாக்குகிறார் என்றும் அச் சிறுவன் மதுபானக் கடை முகாமையாளரிடம் தெரிவித்ததாக அறியப்படுகிறது.

பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, சிலர் உயிரற்ற நிலையிலும், சிலர் அறிவிழந்த நிலையிலும் காணப்பட்டார்கள். இவர்களி மூவர் மிக மோசமான காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிகப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரது நிலை ஆபத்தானதாக உள்ளதெனத் தெரிகிறது. கொல்லப்பட்ட சிறுவர்கள் 2-14 வயதுடையவர்கள் எனவும், ஐந்தாமவர் ஒரு பெண் எனவும் கூறப்படுகிறது.

தாக்குதலை மேற்கொண்டவரெனக் கருதப்படுபவர், சம்பவ இடத்தில் ‘கோமா’ நிலையில் காணப்பட்டதாகவும், அவருக்கு அருகே கத்தியொன்றும், சுத்தியல் ஒன்றும் காணப்பட்டதாதவும் அத் தொலைக் காட்சி தெரிவிக்கிறது. இவர் தற்போது பாரிசுக்கு வெளியேயுள்ள மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Print Friendly, PDF & Email