37 இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்
பிள்ளையான், வியாழேந்திரன், ராகவன், அரவிந்த் குமார் ஆகியோர்களுக்கும் பதவிகள்
ரணிலி விக்கிரமசிங்க அரசினால் 37 இராஜாங்க அமைச்சுப் பதவிகள் ஏற்று (செப்.08) அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் பலர் முந்தைய அரசில் பதவிகளை வகித்தவர்களாவர்.
இதில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கிராமப்புற வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும், எஸ்.வியாழேந்திரன் வர்த்தக இராஜாங்க அமைச்சராகவும், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரக்கட்சி நியமன உறுப்பினரான சுரேன் ராகவன் உயர்கல்வி இராஜாங்க அமைச்சராகவும் மலையகத்தைச் சேர்ந்த சமாகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினரான அரவிந்த் குமார் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் நியமனம் பெறும் தமிழர்களாகும்.
இந்த 37 பேர்களில் சனத் நிஷாந்தா மே 09 அரகாலயர் மீதான தாக்குதல்க்ளின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவர். அருந்திகா ஃபெர்ணாண்டோ மற்றும் பிரசன்னா ரணவீரா ஆகியோர் அக்டோபர் 2018 இல் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வன்முறைகளுக்குக் காரணமானவர்கள். லோஹன் ரத்வத்தை மதுவெறியில் தனது கூட்டாளிகளுடன் சிறைச்சாலைக்குள் துப்பாக்கிய்டன் சென்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை மிரட்டியவர். சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னாள் கூட்டமைப்பு பா.உ. பரராஜசிங்கத்தின் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.